ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

எல்லா இனத்தவரும் ஒன்றிணைந்து வாழ்வோம்!
செவ்வாய் 25 ஏப்ரல் 2017 12:25:11

img

நாட்டை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வதில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் கூட்டு கடப்பாட்டை தொடர்ந்து கட்டிக்காக்கும்படி அனைத்து இனங்களையும் சேர்ந்த மலேசியர்களை புதிய மாமன்னர் சுல்தான் முகமட் V கேட்டுக்கொண்டார். பல்லினத்தவர்களையும் பல சமயத்தவர் களையும் பல கலாச்சாரங்களையும் கொண்ட மலேசியர்களிடையே வளப்பமாகவும் நல்லிணக்கமாகவும் பரஸ்பர மரியாதையுடனும் ஒன்றிணைந்து வாழும் முறை இதனை நிரூபிப்பதாக அவர் குறிப்பிட்டார். நேற்று காலை இங்குள்ள இஸ்தானா நெகாரா பாலாய்ரோங் ஸ்ரீயில் நடைபெற்ற 15 ஆவது மாமன்னராக அரியணையில் அமர்ந்த விழாவில் உரையாற்றிய மாமன்னர் சுல்தான் முக மட் V இந்த வேண்டுகோளை விடுத்தார். அதேவேளையில் எதிர்காலத்தில் தரமான மனித வளமே மலேசியாவின் வெற்றிக்குத் திறவுகோலாக விளங்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். தரமான மனித வளத்தைக் கொண்டுதான் மக்கள் தங்கள் ஆக்கத்திறனையும் போட்டியிடும் ஆற்றலை யும் மேம் படுத்திக்கொள்ள முடியும் என்றார் அவர். ஒவ்வொரு மலேசியரும் அவரவர் பங்கினைப் பொறுப்புடன் ஆற்ற வேண்டும்,நாட்டுக்காக உழைப்பதில் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என்று அவர் நினைவுறுத்தினார். இளைய தலைமுறையே நாட்டின் எதிர்காலம் என்று வருணித்த சுல்தான் முகமட் V, இளையோர்கள் அறி வாற்றலையும் திறன்களையும் கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அறிவைத் தேடுவதற்கு முடிவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த புதிய மாமன்னரின் அரியணை அமரும் வைபவம் முழு அரச சடங்குகளுடன் இங்குள்ள இஸ்தானா நெகாராவில் பாலாய்ரோங் ஸ்ரீயில் மிக கோலாகலமாக நடைபெற்றது. 47 வயதான கிளந்தான் மாநிலத்தின் சுல்தான் முகமட் V மாமன்னராக முடி சூட்டப்பட்டார். புதிய மாமன்னராக பதவியேற்றபோது நாட்டின் அரசர் என்ற அடையாளமாக அவரிடம் அல் குரானின் நகல் ஒன்று வழங்கப்பட்டது. மாமன்னர் கூட்டரசு இஸ்லாமிய தலைவராகவும் சுல்தான் இல்லாத மாநிலங்களின் தலைவராகவும் பதவியேற்றதிற்கான அடையாளமாகவும் அல் குரான் நகல் வழங் கப்பட்டது. மேலும், நாட்டின் தலைவராக பொறுப்பேற்றதற்கான அடையாளமாக மாமன்னரிடம் அரச நீண்டவாள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாளைப் பெற்றுக் கொண்ட மாமன்னர் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார். நாட்டின் மாமன்னர் என்ற முறையில் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்வதாகவும் இஸ்லாமிய சமயத்தின் மாண்பை தொடந்து பாது காப்பதாகவும் நியாயமான, வளப்பமான ஆட்சியை வழங்குவதாகவும் மாமன்னர் உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இந்த அரியணை அமரும் வைபவத்தில் மலாய் ஆட்சியாளர்கள், அரசப் பேராளர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் கலந்து கொண்டனர். சுல்தான் முகமட் V அவர்களுக்கு பேரரசராக பதவி வகித்த கெடா ஆட்சியாளர், சுல்தான் அப்துல் ஹலிம் மு'அட்ஸாம் ஷாவின் ஐந்தாண்டு பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து சுல்தான் முகமட் பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிளந்தான் மாநிலத்திலிருந்து பேரரசராக அரியணை அமரும் இரண்டாவது சுல்தான் இவராவார். இதற்கு முன்னர், 1975 ஆம் ஆண்டு தொடங்கி 1979 ஆம் ஆண்டு வரை, இவரின் தாத்தா சுல்தான் யாஹயா பெத்ரா சுல்தான் இப்ராஹிம் நாட்டின் ஆறாவது பேரரசராக பொறுப்பேற்றிருந்தார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள சுல்தான் முகமட் V 1969 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 தேதி கோத்தா பாருவின் இஸ்தானா பாத்துவில் பிறந்தார். தெங்கு முகமட் ஃபாரிஸ் பெத்ரா எனும் இயற்பெயர் கொண்ட இவர், சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மற்றும் தெங்கு அனிஸ் தெங்கு அப்துல் ஹலிம் அரச தம்பதியரின் மூத்த புதல்வர் ஆவார். 47 வயதான சுல்தான் முகமட் இங்கிலாந்து ஓக்ஸ்வெர்ட் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கல்வி மையத்தில் அரச தந்திர ஆய்வியல் துறையில் பட்டபடிப்பை முடித்தவராவார். 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, கிளந்தான் மாநிலத்தின் 29 ஆவது சுல்தானாக இவர் அரியணை அமர்ந்தார். எளிமையான பண் பையும், உயர்நெறிகளையும் கொண்ட சுல்தான் முகமட் அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மையுடையவர். அதுவே, மக்களால் இவர் இன்றளவும் போற்றப்படுவதற்கு காரணியாக அமைந்துள்ளது. இஸ்லாத்தை மிகவும் உயர்வாக நினைக்கும் சுல்தான் முகமட் இஸ்லாமிய கோட்பாடுகளை தமது நிர்வாகத்திலும் வாழ்க்கையிலும் பின்பற்றி வருகிறார். நாட்டில் மலாய் ஆட்சியாளர் மரபு தொடர்ந்து நீடிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும். உயரிய நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு மலே சியா என்பதை பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த பேரரசர் அரியணை அமரும் விழா உலகுக்கு எடுத்துரைக்கிறது. மலேசியாவிலுள்ள மாநிலங்களின் தலைவர்களாக மலாய் ஆட்சியாளர்களின் மாண்பை எடுத்துக்காட்டும் வகையில் நாட்டின் தலைவராக பேரரசர் விளங்குகிறார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img