செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

இதுதான் 'மேக் இன் இந்தியா'வின் கொள்கையா?
திங்கள் 24 ஏப்ரல் 2017 17:41:59

img

தாமிரபரணி நதியை காக்கும் நோக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாமிரபரணி நதியருகே இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்னன், உ.வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து நடந்த ஆர்பாட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிருந்தா காரத், 'கரையில் நிற்கும் காவல்துறை, நாம் தண்ணீருக்குள் இறங்குவதை விரும்பவில்லை. ஆனால் பெப்சியும் கோக்கும் தண்ணீரை எடுப்பதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இங்கிருக்கும் அரசுகளுக்கும், மக்களுக்கு தண்ணீர் கிடைக்காததை பற்றிக் கவலையில்லை. விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காததைப் பற்றி கவலையில்லை. தமிழகத்தின் பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல் தூரம் நடப்பதை பற்றிக் கவலையில்லை. இதுதான் மாநில, மத்திய அரசுகளின் லட்சணம், கொள்கை. நாட்டில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே கம்யூனிஸ்டுகள் அக்கறை காட்டி வருகின்றன. மோடி கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை எதிர்க்க கூடிய விதத்தில் இப்போராட்டத்தில் இறங்கியுள்ளோம். எதற்கெடுத்தாலும் 'மேக் இன் இந்தியா' என முழங்கும் மோடி, இங்குள்ள தண்ணீரை அமெரிக்க கம்பெனிகளுக்கு தாரை வார்த்து வருகிறார். இது தான் மேக் இன் இந்தியாவின் கொள்கையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.

இந்நிலையில் மாயாவதியின் கட்சியில்

மேலும்
img
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.

நேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு

மேலும்
img
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த

மேலும்
img
எந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.? அழைப்புவிடுக்கும் கட்சிகள்!

அ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன

மேலும்
img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img