வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

மீண்டும் சடுகுடு விளையாடும் பன்னீர்செல்வம்!
திங்கள் 24 ஏப்ரல் 2017 16:54:31

img

பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், அமைச்சர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவரும் நிலையில், பன்னீர்செல்வம் அணியி னர் மீண்டும் சடுகுடு ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மூன்றாகப் பிரிந்த அ.தி.மு.க-வை ஒன்று சேர்க்கும் வகையில், முதல்வர் பழனிசாமி அணி முயன்று வருகிறது. பன்னீர்செல்வம் அணியும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், அமைச் சர்கள் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து, பன்னீர்செல்வம் தனது அணியினருடன் சென்னையில் இன்று ஆலோ சனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, "ஜெயலலிதா மரணம் தொடர்பாக கோடிக்கணக்கான தமிழ்மக்களிடையே சந்தேகம் எழுப்பியது. ஒன்றரைக்காேடி தொண்டர்கள், ஜெயலலிதா மரணம் இயற்கையாக அமையவில்லை. கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று துயரத்தோடு இருக்கிறார்கள். அந்தத் துயரத்தைப் போக்கிடவும் உண்மை நிலையை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசின் வாயிலாக சிபிஐ விசாரணை கமி ஷன் அமைக்கப்பட வேண்டும் என்று பன்னீர்செல்வம் குரல் கொடுத்தார். குரல் கொடுத்தோடு மட்டுமல்லாமல், இந்த மாநில அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்ய வேண்டும் என்றார். அதோடு மட்டுமல்லாமல், இந்த இயக்கத்தை கபளீகரம் செய்யக்கூடிய நிலையிலே இருந்துகொண்டிருக்கிற சசிகலாவும், அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்சியிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் என்று இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தோம். இதற்கிடையில், அந்த பகுதியில் (பழனிசாமி அணி) இருக்கின்றவர்கள் நாங்கள் பேசுவதற்கு தயார் என்று அவர்களாகவே ஒரு குழுவை அமைத்து ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் அறிவித்தார்கள். தன்னோடு நீண்டகாலமாகவே உடனிருந்தவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்கள், என்பதற்காகவும் அவர்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களது கோரிக்கையை முன்னிறுத்தி இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் வகையில் பன்னீர்செல்வம் ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவில் ஏழு பேர் உறுப்பினர்களாக இருப்பதாக அறிவித்தோம். இப்படி அறிவித்தபின்பு உடனடியாக முதலில் அறிவித்தவர்கள் அழைப்பார்கள் என்று காத்திருந்தோம். ஆனால், அதற்கு மாறாக இந்த இரண்டு நாள்களும் ஒரு குழப்பமாக நிலையில்தான் ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு குழப்பமான நிலையில் சொல்லக்கூடிய கருத்து சந்தேகத்தை ஏற்படுத்தும் கருத்தாக இருக்கிறது. ஒரு தலைவர் சொல்கிறார், 'நாங்கள் இன்னும் குழு அமைக்கவில்லை. யார் யார் உறுப்பினர் என்றே தெரியவில்லை என்கிறார்'. ஏற்கனவே வைத்திலிங்கம், குழு அமைக்கப்பட்டு விட்டது என்று அறிவிக்கிறார். அந்த குழுவிலே உறுப்பினராக இருக்கின்ற ஒருவர் (சி.வி.சண்முகம்) இன்னும் குழு அமைக்கப்படவில்லை என்று சொல்கிறார். பேச்சுவார்த்தை என்கின்றபோது கோரிக்கை வைப்பதோடு மட்டுமின்றி பேச்சுவார்த்தையில்தான் கருத்துகளை பரிமாற வேண்டும். அதுதான் ஒரு தார்மீகமான நிலைப்பாடு. எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று வந்துவிட்டால் நமக்குள்ளே இருக்கி்ற உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி கட்டுப்படுத்திக்கொண்டு பேச்சு நடத்தினால்தான் அந்த பேச்சு பேசுவதற்குரிய சூழலாகவே உருவாகும். அப்படி கட்டுப்பாடற்ற சூழ்நிலையில் ஒரு சில தலைவர்கள் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு சில கருத்துகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி சொல்வதினால் எங்களுடைய எண் ணம், இவர்களுக்குள்ளாகவே குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குள்ளாவே ஒரு முடிவை எடுக்க முடியாத சூழலில் இருக்கிறார்கள். இவர்களை வேறுயாரோ இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி வேறுயாரோ இயக்கிக்கொண்டிருப்பவர்கள் எப்படி முறையாக கருத்துகளை பரிமாறிக்கொள்கிற சூழல் ஏற்படும். அப்படி பேசினாலும் கூட வெளியில் சென்று யார் இயக்குகிறார்களோ அவர்கள் சொல்வதை கேட்டுவந்துதான் மீண்டும் பேசக்கூடிய சூழலில், நிர்பந் தத்தில் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம். எனவே நாங்கள் ஏற்கெனவே கூறியதைப்போல இரண்டு கோரிக்கைகள். ஒன்று, ஜெயல லிதாவின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்யவேண்டும். இந்த கோரிக்கை முதன்மையான கோரிக்கை. அடுத் ததாக இந்த கட்சியையே அழிக்கக்கூடிய நிலையில் இருக்கிற சசிகலாவையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகள்தான். அவர்கள் வேறு எதுவோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வேறு எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டால் நாங்கள் முழுமனதாக எந்த கருத்தையும் சொல்லத் தயாராக இருக்கிறோம்" என்றார். முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான பேச்சுவார்த்தைக்குழுவை முதல்வர் இன்று அறிவிப்பார். அறிவிப்பு வந்தவுடன் பன்னீர்செல்வம் அணியினர் தயாாராக இருந்தால் உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெறும். பதவியை விட் டுத் தருவேன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது" என்று கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்

மக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்

மேலும்
img
3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-

'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை

மேலும்
img
தமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு! குழப்பத்தில் தொண்டர்கள்!

120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும்
img
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..?

யோகிக்கு எதிராக கண்டனங்கள்

மேலும்
img
புல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்

உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img