செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

பள்ளி மாணவர்களிடையே குண்டர்தனம்!
திங்கள் 24 ஏப்ரல் 2017 13:14:28

img

பள்ளி மாணவர்களிடையே குண்டர் கும்பல் நடவடிக்கைகள் ஊடுருவியிருப்பதற்கு காரணங்களை ஆராய வேண்டிய சூழலில் நம் சமுதாயம் இப்போது தள்ளப்பட்டுள்ளது. இதற்கு: * இடைநிலைப்பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும் இனவாதம் காரணமில்லையா? * இந்தியர்களிடம் மட்டுமே பரவி இந்தியர்களை மட்டுமே பதம்பார்த்து வரும் குண்டரிய நடவடிக்கைகளின் அதிகரிப்பிற்கு காவல் துறையினர் பொறுப்பில்லையா? * இந்திய சமூகத்தினரிடையே மலிந்து கிடக்கும் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு அரசாங்கம் விதிவிலக்கா? * இந்திய சமூகத்தினரைப் பதம் பார்த்து வரும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளுக்கு ம.இ.கா.வின் அரசியல் செயல்பாடுகள் மூலமில்லையா? * மில்லியன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கும் இந்திய சமூகம் சார்ந்த அரசு சாரா இயக்கங்களும் அறவாரியங்களும் இடைநிலைப்பள்ளி இந் திய மாணவர்களின் குண்டரிய நடவடிக்கைகளுக்குக் காரணகர்த்தா இல்லையா? கிள்ளானில் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்கள் தங்களின் சொந்த பிறந்த நாளையோ அல்லது சொந்தத் தாய் தந்தையரின் பிறந்த நாளையோ கொண்டாடுவதற்குப் பதிலாக தாங்கள் சார்ந்திருக்கும் சட்டவிரோத குண்டர் கும்பலின் பிறந்த நாளை ஆரவாரத்தோடு கொண்டாடிய காணொளியினால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் தலைக்குனிவு ஒரு புறம் இருந்தாலும் ஏற்கெனவே நமது சமூகத்தவர்களின் அடாத செயல்களை வெறும் வாயில் மெல்லும் சமூக ஊடகங்கள் இந்த சம்பவத்தினை ஒட்டு மொத்தமாக இன ரீதியிலான அடிப்படையிலேயே குற்றம் சுமத்தி வருவது நியாயமா என ஏவுகணை கேட்கின்றது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவத்தின் தொடர்பில் சுறுசுறுப்பாகக் களம் இறங்கிய காவல் துறையினர் இதுவரையிலும் 35 மாணவர்களைக் கைது செய்து விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர். கிள்ளான் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் பிற பகுதிகளிலும் (புறநகர்ப் பகுதிகளின் பள்ளிகள் உட்பட) பள்ளி மாணவர்களிடையே ஊடுருவியுள்ள குண் டரிய நடவடிக்கைகள் புதிதான ஒன்றல்ல என்பதை ஏவுகணையால் நிரூபிக்க முடியும். இதுநாள் வரையிலும் குண்டரிய நடவடிக்கைகள் தொடர்பில் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனரா? இடைநிலைப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களிடையே காலூன்றியுள்ள குண்டர் கும்பல் ஈடுபாடுகளுக்குப் பின்னணியாகச் செயல்படு பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளதா என்பதை அறிய ஏவு கணையோடு பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய சமூகமும் அறிந்து கொள்ள விரும்புகின்றது. பெற்றோர்கள்தான் முழுக் காரணமா? நாடு தழுவிய நிலையில் தீயாகப் பரவியிருக்கும் கிள்ளான் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் அடாவடியான நடவடிக்கைகள் தொடர்பில் மலேசிய கல் வியமைச்சர் டத்தோஸ்ரீ மஹாட்சிர் காலிட்டும், தேசிய போலீஸ் படையின் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபக்காரும் விசாரணைகளுக்காகக் கைது செய் யப்பட்டிருக்கும் இந்திய மாணவர்களின் நிலைக்கு முழுப் பொறுப்பினைப் பெற்றோர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியிருப்பதே நியாயமா என்ற கேள்வியை ஏவுகணை முன் வைக்கின்றது. 28.8.2013இல் உள் துறை அமைச்சின் செயலாளர் முகமது ராட்சி குண்டரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பிலான விவரங்களை பட்டியல் 1இல் காண முடியும். 7 விழுக்காடு மக்கள் தொகையினை மட்டுமே மலேசியாவில் கொண் ருக்கும் இந்தியர்களிடையே குண் டரிய நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ளதாக கூறப்படும் 40,313 பேர்களில் ஏறக்குறைய 72 விழுக்காட் டினர் இந்தியர்கள் என்பதற்கு ஒட்டு மொத்தமாகப் பெற்றோர்கள்தான் காரணமா? இடை நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே குண்டறிய நடவடிக்கைகள் துளிர் விடுவதற்குப் பெற்றோர்கள் தான் காரணமா? இடைநிலைப்பள்ளிகளின் சுற்றுச் சூழலில் எவ்விதமான தடங்களும் இல்லாமல் இந்திய மாணவ மாணவிகளை குண்ட றிய நடவடிக்கைகளில் ஈடுபடு வதற்கு உட்படுத்தப்படு வதற்கும் பெற்றோர்கள்தான் காரணமா? இந்திய இளைஞர்களிடையே காணப்படும் மோசமான குற்றச்செயல் ஈடுபாடுகளுக்கும் பெற்றோர்கள் தான் காரணமா? இடை நிலைப் பள்ளி மாணவர்களிடையே ஊடுருவியிருக்கும் குண்டறிய நடவடிக்கைகளுக்கும் பின்னணியாக இருந்து வரும் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கும் பெற்றோர்கர்தான் காரணமா? நடந்துவிட்ட சம்பவத்திற்கு யாரையோ ஒருவரை முழுமையான பொறுப்பாளராக் கிவிடும் ஜப்பானிய கால செயல்பாடுகளிலிருந்தும் நமது சமூகம் மட்டும் விடுபடவில்லை என்பதை நிரூபிக்கவும் வேண்டுமா? கிள்ளான் இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே வியூகமாய் பரவியிருக்கும் அத்து மீறிய குண்டரிய நடவடிக்கைகளுக்கு * இடைநிலைப்பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும் இனவாதம் காரணமில்லையா? * இந்தியர்களிடம் மட்டுமே பரவி இந்தியர்களை மட்டுமே பதம் பார்த்து வரும் குண்டரிய நடவடிக்கைகளின் அதிகரிப்பிற்கு காவல் துறையினர் பொறுப்பிள்ளையா? * இந்திய சமூகத்தினரிடையே மலிந்து கிடக்கும் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு அரசாங்கம் விதிவிலக்கா? * இந்திய சமூகத்தினரைப் பதம் பார்த்து வரும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளுக்கு ம.இ.கா.வின் அரசியல் செயல்பாடுகள் மூலமில்லையா? * மில்லியன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கும் இந்திய சமூகம் சார்ந்த அரசு சாரா இயக்கங்களும் அறவாரியங்களும் இடை நிலைப்பள்ளி இந்திய மாணவர்களின் குண்டரிய நடவடிக்கைகளுக்குக் காரணகர்த்தா இல்லையா? என்பதற்கான விளக்கமும் பதில்களும் நிச்சயமாக நமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக அனைத்து பழி யையும் பெற்றோர்களின் மீது திணித்துவிட்டு நடந்துவிட்ட சம்பவத்திற்கு தீர்வைக் காண்பது சரியானதா? என ஏவுகணை கேட்கின்றது. இனவாதத்திற்கு உடனடி பரிகாரமே தேவை? கடந்த 20 ஆண்டுகளில் இடைநிலைப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் மட்டுமல்லாமல் நிர்வாக முறையிலும், ஆசிரியர்களின் இன விகிதாசாரத்திலும் மிகப் பெரிய உருமாற்றம் கண்டுள்ளதை யாராலும் மறுக்க முடியுமா? இடைநிலைப்பள்ளிகளால் மட்டுமே தேசிய உணர்வையும், மலேசியர் என்ற பற் றையும் ருக்குன் நெகாரா கோட்பாட்டிற்கு உயிரூட்டவும் இன ஒற்றுமையையும் மேலோங்கச் செய்ய முடியும் என்பதிலிருந்து தற்போதைய இன ரீதியி லான அணுகுமுறைகள் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி யாருமே கவலைப்படாததால் இந்திய மாணவர்கள் பல்வேறு வகையினில் பலிகடா ஆகிவருவதைத் தடுக்கவே முடியாமல் குண்டரிய நடவடிக்கைகளின் தொடர்பில் கேக் வெட்டும் அவலம் நடந்துள்ளதற்குச் சான்று என்பதை ஏவுகணை வலியுறுத்துகின்றது. இடைநிலைப்பள்ளிகளில் இனவாதம் உண்டா? என்ற கேள்விக்கு ஏவுகணை பதில்கூற வேண்டியதே இல்லை. *அதிகமான இந்திய மாணவர்கள் பயிலும் இடைநிலைப்பள்ளிகளில் பள்ளி முதல்வர் முதல் நிர்வாகப் பொறுப்புகளுக்கு மறந்து கூட இந்தியர்கள் இல்லை. *விளையாட்டுத்துறைகளில் ஈடுபட கூட வாய்ப்புகள் இன ரீதியிலாகவே அனுகப்படுகின்றது. *பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் இந்திய ஆசிரியர்களின் எண்ணிக்கையில் படுபாதாள வீழ்ச்சி *இந்திய மாணவர்களின் பிரச்சினைகளை களைவதற்கும் தீர்வினைக் காண்பதற்கும் சரியான மன நல ஆலோசகர்கள் உள்ளனரா? *பல பள்ளிகளில் இந்திய மாணவர்களுக்கான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகின்றதே. *சமயப் பாடங்கள் ஓரின மாணவர்களுக்கு மட்டுமே கட்டாயப்படுத்தும் சூழலில் நம்மின மாணவர்கள் விடுபட்டுள்ளனரே. *பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்களுக்கு பரிந்து பேச கூட ஆசிரியர்கள் இல்லையே. இடைநிலைப்பள்ளிகளில் காணப்படும் கட்டொழுங்குப் பிரச்சினைகளுக்கு ஒட்டு மொத்தமாக இந்திய மாணவர்களைப் பலிகடா ஆக்கிவிடும் சூழல் உள் ளதுதானே. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மாணவர்களிடையே இடைநிலைப்பள்ளிகளில் தலைக்காட்டாத குண்டரிய நடவடிக்கைகள் இப்போது எங்கிருந்து வந்தது? மலேசியக் கல்வி அமைச்சின் நிர்வாக அமைப்பில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதே அது காரணமில்லையா? கேட்டால் குற்றம் என் றால் இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்களின் எதிர்காலம் சுடுகாடாகிவிடுமே பரவாயில்லையா? அதிகமாக இந்திய மாணவர்கள் பயில் கின்ற இடைநிலைப்பள்ளிகளில் இனவாதம் தொடர்ந்தால் தேசியப் பிரச்சினையாக குண்டரிய நடவடிக்கைகள் மாறிவிடாதா? இந்திய சமூகத்தின் மிகப் பெரிய பின்னடைவிற்குக் காரணமே எதையும் ஏற்றுக் கொள்ளும் இயலாத தன்மையே என்பதை மறுக்க முடியுமா? அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது என்பார்கள் அதைப் போலவே இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்களின் குண்டரிய ஈடுபாடுகள் அணை யைக் கடந்து விட்டதாகவே கருதும் நிலையில் நாளைய தொடரில் சந்திப்போம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img