சனி 22, செப்டம்பர் 2018  
img
img

வட கொரியாவிற்கு எதிராக யுத்தத்தில் பங்கேற்க கனடா தயார்
ஞாயிறு 23 ஏப்ரல் 2017 11:46:43

img

உலக மக்களை காப்பாற்ற வட கொரியாவிற்கு எதிரான யுத்தத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பங்கேற்க கனடா ராணுவமும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட கொரியாவின் அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரியா தீபகற்பத்திற்கு அமெரிக்காவின் போர்க்கப்பல் அனுப்பப்பட்ட நாள் முதல் யுத்தம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வட கொரியாவின் எல்லையில் சீனா தனது ராணுவ தளவாடங்களை நிலை நிறுத்தியுள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவிற்கு ஆதரவாக ராணுவ பயிற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில், வட கொரியாவால் யுத்தம் ஏற்படும் சூழல் உருவானால் ஐக்கிய நாடுகளுக்கு உதவும் வகையில் கனடா ராணுவமும் யுத்தத்தில் பங் கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் 1953-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளுடன் கனடா மேற் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த ஏப்ரல் 10-ம் திகதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ வட கொரியாவின் அத்துமீறல்களை கடுமையாக கண்டித்துள்ளார். அப்போது, ‘வட கொரியாவில் நிகழும் அசாதாரண சூழல் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகளையும் பெரி தளவில் பாதிக்கும். இதனை தவிர்க்க அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும்’ எனப் பேசியுள்ளார். இதன் மூலம், எதிர்காலத்தில் வட கொரியாவிற்கு எதிரான யுத்தத்தில் கனடா ராணுவமும் ஐக்கிய நாடுகளுக்கு ஆதரவாக பங்கேற்க வாய்ப்புள்ளது குறிப் பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img