ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

பந்திங் நகைக் கடையில் ஐந்தே நிமிடத்தில் 5 லட்சம் வெள்ளி கொள்ளை!
ஞாயிறு 23 ஏப்ரல் 2017 09:49:29

img

பந்திங் நகரில் உள்ள எழில் மணி என்ற இந்தியருக்குச் சொந்தமான நகைக் கடையில் புகுந்த இரு கொள்ளையர்கள் ஐந்தே நிமிடத்தில் ஒரு லட்சம் வெள்ளி மதிப்புடைய நகைகளை அள்ளிக்கொண்டு தப்பியுள்ளனர். இச்சம்பவம் நேற்று காலை 11.15 மணி அளவில் இங்கு ஜாலான் பூங்கா பெக்கானில் உள்ள நகைக்கடையில் நிகழ்ந்தது. இச்சம்பவத்தை உறுதிப் படுத் திய கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஷிஷான் பின் துகிரான், நேற்று காலையில் வழக்கம் போல் கடை திறக்கப்பட் டதுடன் காலை 11.15 அளவில் திடீரென கடையினுள் புகுந்த இந்திய ஆடவன் ஒருவன் அங்கிருந்த கண்ணாடி பேழைகளில் ஒன்றை பெரிய ரக சுத்தி யலைக்கொண்டு உடைத்து அங்கு அடுக்கி வைத்திருந்த வெ.ஒரு லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலிகள் மற்றும் பல ரகத்திலான நகைகளை அள்ளிக் கொண்டு கடையின் வெளியே மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த மற்றொரு ஆடவனுடன் தப்பியதாக கூறினார். ஏறக்குறைய ஐந்து அடி உயரம் கொண்ட இக்கொள்ளையன் முகத்தை முழுமையாக மூடக்கூடிய தலைக்க வசத்தை அணிந்திருந்ததுடன் கையில் கை உரையுடன் வெள்ளை நிறத்திலான முழுநீல டீ சட்டை, கருப்பு நிற கால் சட்டை அணிந்திருந்ததாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்த தடயவியல் மற்றும் சிலாங்கூர் மாநிலப் போலீஸ் பிரிவைச் சேர்ந்த டி.9 குற்றத் தடுப்பு அதி காரிகள் அங்கு பொருத்தப் பட்டிருந்த இரகசிய கேமராக்களை சோதனையிட்டதாக தெரிவித்த சூப்ரிண்டெண்டன் அஷிஷான் பின் துகிரான், இச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அல்லது குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி இன்ஸ் பெக்டர் ஷா என் பவருடன் 010 - 3617250 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் வழங்கி ஒத்துழைக் குமாறு கேட்டுக்கொண்டார். பந்திங் வட்டாரத்தில் நகைக்கடை தொழிலில் கால் பதித்துவரும் ஒரேயொரு இந்தியரான எழில்மணி நகைக்கடையில் இதற்கு முன்பு ஒரு தடவை இது போன்ற கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img