செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

என் காதலியை கொலை பண்ணிட்டேன் சார்!
சனி 22 ஏப்ரல் 2017 18:35:47

img

நாகை மாவட்டம், பூம்புகார் காவல் நிலையத்தில் இன்று (22.04.2017) அதிகாலையில் ரத்தம் தெறித்த உடையோடு ஒருவர், ‘நான் என் காதலியை கொலை பண்ணிட்டேன் சார்’ என்று சொன்னபோது, அதிர்ச்சியில் உறைந்தனர் காவலர்கள். என்ன நடந்தது? :பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் மதன்ராஜ் (22). இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்தில் தங்கி படித்தபோது, அங்கு கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் துர்காவை பள்ளி பருவதிலேயே காதலித்திருக்கிறார். தற்போது, சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்துவந்தார் துர்கா. பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு, கடல் தொழில் செய்துவந்தபோதிலும் துர்கா உடனான காதலை தொடர்ந்திருக்கிறார் மதன்ராஜ். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த வர்கள். இன்று அதிகாலையில் ரத்தம் தெறித்த உடையோடு பூம்புகார் காவல் நிலையத்துக்கு வந்த மதன்ராஜ், ‘நான் என் காதலியை கொலை பண்ணிட்டேன் சார்’ என்று கூறியுள்ளார். இதைகேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மதன்ராஜை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, மதன்ராஜ் அளித்த வாக்குமூலத்தில், “கல்லூரி சென்றவுடன் துர்கா ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என ஆண் நண்பர்களுடன் பேசுவதையும், என்னைவிட்டு மெல்லமெல்ல விலகுவதையும் என்னால் தாங்க முடியவில்லை.இந்நிலையில், வாரவிடுமுறைக்காக சென்னையிலிருந்து பேருந்தில் ஜெகதாப்பட்டினம் சென்றுகொண்டிருந்த துர்காவை, செல் போனில் தொடர்புகொண்டு, மயிலாடுதுறை பேருந்துநியைலத்தில் இறங்கு, 10 நிமிடம் பேசிவிட்டு அடுத்த பஸ்சில் ஏற்றிவிடுகிறேன் என்று ஆசையாய் பேசினேன். என் பேச்சை நம்பி மயிலாடுதுறையில் நேற்றிரவு 12 மணிக்கு இறங்கிய துர்காவை டூவீலரில் ஏற்றி பூம்புகார் கடற்கரைக்கு அழைத்துச்சென்றேன். என்னத்தவிர வேறு யார்க்கிட்டேயும் பழகக்கூடாது. செல்போனில் செய்தி பகிரக்கூடாது. படித்து முடித்ததும் என்னைத்தான் கல்யாணம் செய்து கொள்ளணும், என்றெல்லாம் கண்டிசன் போட்டேன். நான் சொல்ற எல்லாத்துக்கும் எதிர்ப்பாவே பதில் சொன்னா. ஆத்திரம்வந்து, வெறித்தனமா கல் லால மூணுதடவ தலைய நசுக்கியே கொன்றேன். ரொம்ப நேரம் இறந்துபோன உடம்ப வெறிச்சிப் பார்த்துக்கிட்டே இருந்தேன். என் கோபம் தனிஞ்சப் பிறகுதான் நான் ஒரு கொலைபண்ணிட்டேனு புரிஞ்சது. நேரா உங்ககிட்டே வந்துட்டேன்” என்று கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img