செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

மார்பகத்தை இழந்த மாது!
வெள்ளி 21 ஏப்ரல் 2017 13:47:30

img

இருதய சிகிச்சையின் போது தமது இடது பக்க மார்பகத்தை இழக்க நேர்ந்ததாகக் கூறி, மாது ஒருவர் அரசாங்கத்தின் மீதும் மருத்துவர் மீதும் வழக்குத் தொடுத்துள்ளார். செர்டாங் மருத்துவமனையைச் சேர்ந்த இருதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் அப்துல் முய்ஷ் ஜாசித் மற்றும் மலேசிய அரசாங் கத்தை பிரதிவாதிகளாக அந்த மாது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள உயர் நீதிமன்ற பதிவகத்தில் ஐ.பெர்தேமாவதி என்ற அந்த மாது தம்முடைய வழக்கறிஞர் டத்தோ டாக்டர் அருணன் செல்வராஜ் மூலம் சிவில் வழக்கை தாக்கல் செய்தார். பெர்தேமாவதிக்கு இருதய அறுவை சிகிச்சை டாக்டர் செய்தபோத அந்த சிகிச்சைக்கான வழிமுறைகளில் நிகழ்ந்த அலட்சியம் காரணமாக இடது பக்க மார்பகத்தை இழக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செர்டாங் மருத்துவமனை இச்சம்பவத்திற்கு விளக்கம் தரத் தவறிவிட்டதைத் தொடர்ந்து பெர் தேமாவதி இந்த வழக்கைத் தொடுத்துள்ளார் என்று வழக்கறிஞர் டத்தோ அருணன் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
img
நாட்டில் சாக்கடை அரசியல் நீடித்தால், அடுத்து நான்கூட பாதிப்படையலாம்

அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆபாசக் காணொளிகள்

மேலும்
img
நானும் அஸ்மினும் 4 முறை ஓரின உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அந்த காணொளி பதிவுகள் ஆன்லைனில் கசிந்து

மேலும்
img
விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்

அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img