வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாஹிர் நாயக்கின் சேவை மலேசியாவிற்கு தேவை இல்லை.!
வெள்ளி 21 ஏப்ரல் 2017 11:56:21

img

சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாஹிர் நாயக்கின் சேவை மலேசியாவிற்கு தேவை இல்லை. அவர் மலேசியாவில் இருப்பதற்கு இடமும் இல்லை என்று மஇகா தேசியத் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஸாஹிருக்கு மலேசியாவின் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுப்ரா மேற்கண்டவாறு கூறினார். நேற்று முன்தினம் இரவு இங்கு புத்ரா உலக வாணிப மையத்தில் இந்திய இளைஞர்களுடனான ‘திஎன்50’ கருத்தரங்கு நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர்கள் பலர் ஸாஹிருக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து மலேசியாவில் வழங்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரி வித்து கேள்வி எழுப்பினர். இந்தியாவில் தீவிரவாத செயலுக்கான விவகாரத்தில் விசாரணை நடத்த தேடப்பட்டு வரும் ஸாஹிருக்கு மலேசியாவின் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது எதற்காக என இந்திய இளைஞர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சுப்ரா, ‘மலேசியாவிற்கு ஸாஹிர் நாயக் தேவையில்லை. அவர் இஸ்லாம் சமயத்தின் முன்னேற்றத்திற்கு ஏதாவது உதவி செய்வாரா? என்று வினவினார். இதற்கு ‘இல்லை’ என்பதே பதில் என்று சுப்ரா சொன்னார். ‘உள்ளூரில் ஸாஹிருக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அது தற்போதைய சமய ஆதிக்கத்தைக் காட்டுவதாக அமைகிறது. இந்த ஆதிக்கத்தை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்பதே நம்முடைய பிரச்சினை’ என அவர் மேலும் கூறினார். இம்மாதிரியான விசயங்களைச் சரியாக கையாளாமல் பாகுபாடுகள் காட்டப்படுமானால் அது நாட்டின் உருமாற்ற திட்டத்திற்கு எதிர்மறையான விளை வுகளை ஏற்படுத்தும் என சுப்ரா எச்சரித்தார். இந்துத்துவ போதனைகளை கடுமையாக விமர்சித்து சொற்பொழிவாற்றி வரும் ஸாஹிருக்கு இந்துக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் ஸாஹிருக்கு மலேசியாவின் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை துணைப்பிரதமரும் உள் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் அறிவித்து இருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் அந்த அந்தஸ்தை கொண்டுள்ளார். அவர் மலேசியாவின் நிரந்தர குடியிருப்புவாசி. ஆனால் மலேசியப் பிரஜை அல்ல என்று துணைப்பிரதமர் விளக்கியிருந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img