வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

ஜெரம் ஆற்றோரத்தில் சுகாதாரக்கேடு! பொது மக்கள் அவதி!
வியாழன் 20 ஏப்ரல் 2017 17:19:08

img

ஜெரம் கடற்கரையொட் டியுள்ள ஆற்றோரத்தில் துர்நாற்ற மெடுத்துக் கிடக்கும் கழிவுகளால் அப்பகுதியில் காற்றின் தூய்மைக்கேடு மோசமடைந் துள்ள தாக பொதுமக்கள் முறையிட்டனர். ஜெரம் 15ஆவது கல், சுங்கை செம்பிலாங், ஜாலான் பாகான் சத்துவில் பல நாட்களாக இந்த அவலம் நீடிப்பதாக அவர்கள் கூறினர். கடல் வகை உணவு கழிவுகளும், நெகிழி குப்பைகளும் சுங்கை ஜங்குட் ஆற்றோரத்தில் குவிந்துக் கிடப்பதால் குடலைப் பிடுங்கும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப் படுவதாக தெரியவருகிறது. பல நாட்களாக புழுக்கள் மொய்க்கும் கழிவுகளால் அப் பகுதி மக்களின் ஆரோக்கியத் திற்கு மிரட்டல் ஏற்பட்டுள்ள தாக ஜெரம், தாமான் ஏசானைச் சேர்ந்த கா.இராஜேந்திரன் தெரிவித்தார். வெளியாட்கள் சம்பந்தப்பட்ட ஆற்றோரத்தில் கழிவுகளை விருப்பத்திற்கு கொட்டி குவிப்பதாக அப்பகுதி மீனவர் கள் முறையிட்டனர். இதனால் அந்த ஆற்றின் தூய்மைக்கேடு அதிகரிக்கலாம் என்பதால் மாவட்ட மன்றம் இந்த அவலத்தை இனி எத்தனை நாட்களுக்கு வேடிக்கை பார்க்கப் போகிறது என்று இரா ஜேந்திரன் ஆவேசப்பட்டார். ஜெரம் கடற்கரையொட்டி யுள்ள சம்பந்தப்பட்ட ஆற்றோரத்தின் தூய்மையை கோலசிலாங்கூர் மாவட்ட மன்றம் பாதுகாக்க தவறி விட்டதாக ஜெரம் ஜாலான் பாகானைச் சேர்ந்த கோ சுவான் கீ வருத்தத்துடன் தெரிவித்தார். ஜெரம், புக்கிட் செராக்கா மஇகா கிளைத் தலைவர் வேலாயுதம் பெரியண்ணன், ஜெரம் தாமான் செத்தியா புடி மகேஸ்வரி மாணிக்கம் (வயது 34), ஜெரம் பாடாங் காஜா 15ஆவது கல் தேவி சுப்பிர மணியம் (வயது 52), கம்போங் ஜெரம் இம்ரான் முகமது (வயது 60), ஜெரம் 15ஆவது கல் யாப் வா செங் (வயது 67), ஜெரம் ஜாலான் தம்பாக் ஜாவா தமிழ்ச்செல்வம் ஆறுமுகம் (வயது 49) ஆகியோர் மாவட்ட மன்றத்திற்கெதிராக தங்களு டைய அதிருப்தியை பதிவு செய்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட பகுதிக்கான மாவட்ட மன்றத்தின் புதிய குத்தகையாளர்களால் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது என்று குறிப்பிட்ட ஜெரம், சுங்கை பூலோ பகுதிக்கான மாவட்ட மன்ற உறுப்பினர் புஷ்பா நாகையா, பொதுமக்கள் புகார் குறித்து மாவட்ட மன்றத்தின் சம்பந்தப்பட்ட பிரிவிடம் முறையிடப்படும் என அவர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img