ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

எதற்கும் பயந்து இந்தியர்களின் பிரச்சினைகளுக்காக குரல்கொடுப்பதில் எள்ளளவும் தயங்கமாட்டோம்!
வியாழன் 20 ஏப்ரல் 2017 16:01:29

img

மலேசிய இந்தியர்களின் உரிமைக் குரலாகவும் சமூகப் பொருளாதார இன்னல்களைப் படம் பிடித்துக் காட்டும் ஊடகமாகவும், இந்திய மக்களின் போராட்டங்களுக்கு தோள் கொடுத்து நிற்கும் நண்பனாகவும் மிளிர்ந்து வரும் மலேசிய நண்பன் பத்திரிகைக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் விஷமத்தனமான பிரச்சாரங்களை மலேசிய நண்பனின் வாசகர்கள் கடுகளவும் நம்பிவிட மாட்டார்கள் என நண்பன் நிர்வாகம் கருதுகின்றது. மலேசிய இந்தியர்களின் தேவைகளையும் உரிமைகளையும் குறி வைத்து அரசியல்வாதிகளின் பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி வரும் மலே சிய நண்பனின் செயல்பாடுகள் பேரளவிலான வரவேற்பினைப் பெற்றுவரும் சூழலைத் தாங்கிக் கொள்ள முடியாத சில விஷமிகள் மலேசிய நண்பனுக்கு எதிராகப் பொய்யான தகவல்களைச் சமூக ஊடகங்களின் வழி பரப்பி வருவது மிகவும் கேவலமான செயல் என்பதை நண்பனைத் தொடர்பு கொண்ட வர்கள் தெரிவித்தனர். சோரம் போகும் பத்திரிகை அல்ல! ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் உதிரிக்கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கும் சாமரம் வீசும் பத்திரிகையாக என் றுமே செயல்படாத மலேசிய நண்பனின் நிலைப்பாட்டினை அசைத்துப் பார்க்கும் வகையில் அறவே தொடர்பு இல்லாத விவகாரங்களுக்கு கண், காது, மூக்கினை வைத்து சமூக ஊடகங்களின் வழி மலேசிய நண்பனுக்கெதிராக ‘புறக்கணிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையினை முன் வைத்திருப்பவர்களை மலேசிய இந்தியர்களுக்கு துரோகம் இழைப்பவர்களாவே நண்பன் நிர்வாகம் கருதுகின்றது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்...! மலேசிய இந்தியர்களின் விவகாரங்களை அம்பலப்படுத்தவும், அவர்களின் போராட்டங்களுக்கு துணையாகவும் இன்றுவரை செயல்பட்டு வரும் மலேசிய நண்பனின் சமூகப் பணியை கீழறுப்புச் செய்ய விஷமத்தனமான பிரச்சாரத்திற்கும் மலேசிய நண்பனுக்கும் 100 விழுக்காடு தொடர்பே இல்லை என்பதை மலேசிய நண்பனுக்கு வற்றாத ஆதரவினை வழங்கிவரும் அனைவரும் அறிந்துள்ளதாகவே நண்பன் நிர்வாகம் கருதுகின்றது. கெடுவான் கேடு நினைப்பான்" என்பதன் வழி மலேசிய இந்தியர்களின் அனைத்து விவகாரங்களுக்கும் தைரியமாகவும் விவேகத்துடனும் குரலெழுப்பி வரும் மலேசிய நண்பனின் பணியினை அர்ப்பத்தனமான செயல்பாடுகளினாலும், அருவருக்கத்தக்க நடவடிக்கைகளாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நண்பன் நிர்வாகம் நம்பிக்கையோடு உணர்கின்றது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img