சனி 22, செப்டம்பர் 2018  
img
img

பணிக்கு அமர்த்தப்படாமல் தத்தளிக்கும் மருத்துவப் பட்டதாரிகள்!
புதன் 19 ஏப்ரல் 2017 12:27:06

img

மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக வேலைக்கு அமர்த்தப்படுவது குறித்து மருத்துவப் பட்டதாரிகளுக்கு பொதுச்சேவை ஆணையம் இது வரை எந்த அறிவிப்பும் செய்யாமலிருப்பதால் திரிசங்கு சொர்க்க நிலையில் விடப்பட்டது போல் நாட்டில் மருத்துவ பட்டதாரிகள் தற்போது தத்தளித்து வருகின்றனர். அவர்கள் மருத்துவமனைகளில் பணிக்கு அமர்த்தப்படுவது தொடர்பாக பொதுச் சேவை ஆணையம் நேற்று முன்தினம் ஏப்ரல் 17 ஆம் தேதி திங்கட் கிழமை அறிவித்து இருக்கவேண்டும். ஆனால், திடீரென்று காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டுள்ளது என்று ஜ.செ.க. கூலாய் நாடாளுமன்ற உறுப் பினர் தியோ நை சிங் தெரிவித்தார். மருத்துவப் பட்டதாரிகளில் பலர் அரசாங்க மருத்துவமனைகளில் வேலைக்கு அமர்த்தப்படுவதற்காக ஓராண்டுக்கு மேல் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் பயிற்சி மருத்துவர்களுக்கான நேர்காணலுக்குச் சென்று முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டில் 3,474 மருத்துவப் பட்டதாரிகள் நேர்காணலுக்குச் சென்றார்கள். 1,687 பேர் மட்டுமே அரசாங்க மருத்துவமனைகளில் பயிற்சி மருத் துவர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். மருத்துவ பட்டதாரிகள் வேலையின்றி தத்தளிப்பதால் அவர்கள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். பலர் தாங்கள் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு வங்கியில் பெறப்பட்டுள்ள கடனை திரும்பச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். வங்கிகளும் அவர்களை நெருக்கி வருகின்றன. பயிற்சி மருத்துவர்களாக பணிக்கு அமர்த்தப்படுவது தொடர்பில் பொதுச் சேவை ஆணையம் துல்லியமாக எந்தவொரு தேதியையும் அறிவிக்காமல் இருந்தால் அவர்கள் எப்படி தங்கள் பணி தொடர்பாக திட்டமிட முடியும் என்று தியோ கேள்வி எழுப்பினார். அவர்களை பயிற்சியில் அமர்த்தாமலேயே வைத்திருந்தால் அவர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும். திறன் பெற்ற மருத்துவப் பட்டதாரிகளை பயன் படுத்தவில்லை என்றால் நமக்குத்தான் இழப்பு என்று தியோ குறிப்பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img