திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

வரவேணாம்... பழைய பன்னீர்செல்வமா வரவே வேணாம்!'
புதன் 19 ஏப்ரல் 2017 07:59:46

img

பிரிஞ்சு கிடக்கிற அ.தி.மு.க அணிகள் திரும்ப ஒண்ணு சேருமா சேராதாங்கிறதுதான் இப்ப ஹாட்டஸ்ட் கேள்வி. அது இருக்கட்டும். எப்போதுமே குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்புற தி.மு.க. சும்மாவே இருந்தால் எப்படி... இந்த நேரத்துக்கு ஏதாவது பண்ணனும்ல. அதுதான் அவங்களுக்காக சில ஐடியாஸ்... * சிரிச்சாப்போச்சு ரவுண்டே சின்னம்மாவின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் என்பதால், அ.தி.மு.க. அமைச்சர்கள் போற இடத்தில் எல்லாம் கரைக்டாக ஸ்கெட்ச் போட்டு ஆஜர் ஆகி சிரிப்புக் காட்டலாம். இப்போதைய நிலைமையில் அ.தி.மு.க-காரர்களோ தி.மு.க-காரர்களோ அவர்களை சாதாரணமாகப் பார்த்தாலே பொதுமக்களுக்கெல்லாம் தானாக சிரிப்பு வந்துடும்கிறது வேற கதை. ஆனால் அ.தி.மு.க-காரர்கள் உஷார் மோடில் இருப்பதால் கொஞ்ச ம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். * நீங்கள்லாம் தனித்தனியா இருக்கும்போது எவ்வளவு ஸ்டைலா கெத்தா இருந்தீங்க தெரியுமா? தெய்வமே என் கடவுளே... எவ்வளவு கெத்தா இருந்தீ ங்க தெரியுமா? டி.வி-யில உங்களைப் பார்க்கும்போது எல்லாம் அப்படியே சில்லறைகளை அள்ளிச் சிதறவிட்டேன். ஆனால் இப்போ எங்களாலே உங்களைப் பார்க்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கு ஃப்ரெண்ட்ஸ். மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும்... நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்... என குந்தாங்குலையாக எதையாவது கோத்துவிட்டுப் பார்க்கலாம். * 'உங்களைத்தான் இன்சல்ட் பண்ணிருக்காங்களே... அப்புறம் எப்படி ஃபங்சனுக்குப் போவீங்க?'ன்னு 'கில்லி'யில விஜய் அவங்க அம்மாகிட்ட கேட்கிற மாதிரி தனித்தனியா இருந்தப்போ உங்களை எப்படி எல்லாம் என்னவெல்லாம் சொல்லித் திட்டினாங்க. அதையெல்லாம் மறந்துட்டு இப்போ போய் அவங்ககூட சேரலாமான்னு ரெண்டு அணிகள் பக்கமும் போய் பழைய எஸ்.டி.டி-களையெல்லாம் கிளறிவிட்டுக் கிடாய் வெட்டலாம். * வரணும் பழைய பன்னீர்செல்வமா வரணும்கிறதெல்லாம் சினிமாவுக்கு வேணும்னா சரியா வரலாம். ஆனா அரசியலுக்கு சரி வராது. போக அது நம்ம ரெண்டுபேருக்கும் எதிரியாகக் கட்சி ஆரம்பிச்ச விஜயகாந்த்தோட படம் வேற. அதனால வர வேணாம் பழைய பன்னீர்செல்வமா வரவே வேணாம்கிறதையே உங்களோட கொள்கையா வெச்சு கோதாவுல இறங்குங்க என ஓ.பி.எஸ்-ஸிடம் ஃப்ரீ அட்வைஸ் வழங்கலாம். * டப்ஸ்மாஷ் பண்றவங்க முகம்கூட இப்போவெல்லாம் டி.வி-யில வருது, ஆனா ஆட்சியில இருக்கிற உங்க முகம் கட்சியில ஒண்ணா இருக்கும்போது எப்பவாச்சும் வந்திருக்கா? 1947-லேயே சுதந்திரம் வாங்கியாச்சுன்னு சொன்னாலும் சுதந்திரமா உங்களால ஒரு பேட்டி கொடுக்க முடிஞ்சுதா? ஆனால் இப்போ பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை பிரேக்கிங் நியூஸ் கொடுக்கிறீங்க. அதெல்லாம் எப்படி முடிஞ்சுது. தனித்தனியா இருக்கிறதனாலே... ஸோ தனிமை நல்லது என காதோரம் லோலாக்காய் பாடலாம். இவ்வளவு பாட்டுகளைப் பாடியும் அதை 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' கணக்காக எடுத்துக்கிட்டு அ.தி.மு.க. குரூப்பின் முடிவு இருந்துச்சுன்னா வேற என்ன உருப்படியா வேற நல்ல வேலை ஏதாவது இருந்தால் தி.மு.க அதைப் போய்ச் செய்யலாம்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img