img
img

மலேசிய இந்தியர் செயல்திட்டம் 2017! இந்தியர்களின் இலக்கினை எட்டுமா?
செவ்வாய் 18 ஏப்ரல் 2017 18:18:35

img

சுதந்திரம் பெற்ற மலேசியாவின் தற்போதைய அபரிமிதமான வளர்ச்சிக்கு அஸ்திவாரம் அமைத்திருந்த இந்தியர்களின் தியாகங்களும், அர்ப்பணிப்பும், உயிர்ப் பலிகளும் வரலாற்று நூல்களிலிருந்து விடை பெற்றுக் கொண்டுள்ளதைப் போலவே நமது உரிமைகளும், அடிப்படை வாய்ப்புகளும், தேசிய நீரோட்ட வளர்ச்சியி லும் விடுபட்ட சமூகமாகப் பரிணாமம் பெறுவதற்கு நமது சமூகத்தின் அரசியல் பிரதிநிதி த்துவமும், சுக்கு நூறாய் சிதறியிருக்கும் நமது ஒற்று மையின்மையுமே காரணம் என்பதை அறியாமல் தவித்து வரும் வேதனையை ஏவுகணையால் உணர முடி கின்றது. கடந்த 60 ஆண் டுகளில் 13 பொதுத் தேர்தல்களை (PRU) நாம் சந்தித்து இருக்கின்றோம். தேர்தல் காலங்களில் அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையே இந்தியர்களும் மலேசியாவில் உள்ளனர் என்ப தைத் தெளிந்தவர்களாக 'உதட் டளவி லேயே கரும்பினைப் பயிர் செய்யும்' (Menanam Tebu di bibir) நடவடிக்கை யாக இனிப்பான வாக்குறு திகளை தேர்தல் மேடைகளில் முழங்கும் கைங் கரியத்தினை இனிமேலும் இந்திய சமூகம் நம்பிவிடாது என்பதனை ஏவுகணை வலியுறுத்துகின்றது. இதுவரையிலும் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட அத்தனை வாக்குறுதிகளும் நீரின் மேல் எழுதிய வாக்குறுதிகளாக அடித்துச் செல்லப்பட்டிருப்பதைப் பற்றி மஇகாவிற்கோ அல்லது அரசாங்க சார்பு உதிரி கட்சிகளுக்கோ அல்லது தேர்தல் கால அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளும் வான்குடை அரசியல் தலைவர்களுக்கோ எவ்விதமான கவலையையோ அல்லது சலனத்தையோ ஏற்படுத்தியதாக ஏவுகணை அறியவில்லை. இந்திய சமூகத்தினை முன் வைத்து தேர்தல் காலங்களில் எவ்வளவு கறக்கலாம் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் வாக்குறுதிகளாக வழங்கப்பட்ட இந்தியர்களுக்கான; * அடையாள ஆவணங்களுக்கான பரிகாரம் * வீடமைப்புத் திட்டங்கள் * விவசாயம், கால்நடை வளர்ப்பிற்கான நில வாய்ப்புகள் * உயர் கல்வி வாய்ப்புகள் * சமூகப் பொருளாதார இன்னல்களுக்கான தீர்வுகள் போன்ற அத்தனை வாக்குறுதிகளும் வாயளவிலேயே மரணித்துப் போனதற்கு யாருமே வருந்தியதாகத் தெரியவில்லை. உடையவன் இல்லாத மக்களாக... கடந்த 60 ஆண்டுகளாக இடை விடாது நடுவண் அரசாங்கத்தின் ஆட்சியினைத் தக்க வைத்துக் கொண்டு இன ரீதியிலான அணுகுமுறையில் அரசியல் களத்தினை நடத்தி வரும் தேசிய முன்னணியின் அகராதியில் இந்தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல்களைத் தீர்ப்பதற்கான மீட்பு நட வடிக்கைகளே இல்லாமல் போனதை யாருமே மறுக்க முடியாது. இன ரீதியிலான அணுகுமுறைகளால் மலாய்க்கார சமூகமும், சீன சமூகமும் இமய மென உயர்ந்திருக்கும் பட்சத்தில் மஇகாவின் செயல்பாடுகளால் இந்திய சமூகம் கூன் விழுந்த சமூகமாக உருமாறியிருப்பதையும் யாருமே மறுக்க முடி யாது. இதற்குத் துணை போயிருக்கும் உதிரிக் கட்சிகளின் பங்களிப்பையும் மறுக்க முடியாது. ஆக மலேசிய இந்தியர்கள் ஒட்டுமொத்தமாகவே நம் முடைய சமூகப் பொருளாதார மேம்பாட்டினை நமது அரசியல் பிரதிநிதிகள் தடுத்துள்ளதாகவே ஏவுகணை கூறுவது பிழையாகி விடுமா? ஒவ்வோராண்டும் அக்டோபர் மாத வாக்கில் நாடாளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்படும் ஆண்டு வரவு செலவு கணக்கறிக்கை யின் வழி (Bajet) இந்திய சமூ கத்திற்குப் பிரத்தியேகமாக வழங்கப்படும் தொகையில் விழுக்காடு 0.09 மட்டுமே என்பதிலிருந்து நமது அரசியல் பிரதிநிதித்துவத்தின் சாணக்கியத்தை உணர்ந்து கொள்ள முடியும். 16.10.2016 இல் பிரதமர் சமர்ப்பித்திருந்த 2017 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மொத்த தொகை வெ. 260.8 பில்லியன் ஆகும். சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் நலிவுற்றிருக்கும் இந்திய சமூகத்தின் இன்னல்களைக் களைய வெ. 50 மில்லியன் (வெ.5 கோடி) மட் டுமே என்பதை யாராவது கேட்டார்களா? 2.6 மில்லியன் மக்கள் தொகைக்கு வெ. 50 மில்லியன் மட்டுமே ஒதுக்கீடு என்பது அவலமில்லையா? தலைக்கு வெ. 20ஐ வைத்துக் கொண்டு நமது இன்னல்களைக் களைந்து விட முடியுமா? மலேசிய இந்தியர்கள் உடையவன் இல்லாதவர்களாகவும் பிரதி நிதித்துவமே இல்லாதவர்களாகவும் அல்லாடுகின்றோம் என்பதுதான் உண்மையாகும். ம.இ.கா.வின் நிர்வாகக் கோளாறுகள் மலேசிய இந்தியர்களின் 60 ஆண்டுகால இன்னல்களுக்கு 100% ம.இ.கா.வின் நிர்வாகக் கோளாறுகளே பிரதானம் என்பதை யாராவது மறுக்க முடியுமா? ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையைப் பெற்ற இந்தியா 29.1.2006 ஆம் ஆண்டில் சிறுபான்மையினருக்கான சிறப்பு அமைச்சரை நியமனம் செய்து 4,195.8 கோடி ரூபாய் (USD 620 Million) மானியத்தையும் பகிர்ந்தளித்திருக்கும் நிலையில் மலேசியாவில் இன்னும் எத்தனை மாமாங்கங்கள் காத்திருக்க வேண்டுமோ என்ற கேள்வியே ஏவுகணைக்குத் தோன்றுகின்றது. 2017 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் வழி உயர்கல்வி உபகாரச் சம்பளங்கள் மாணவர்களின் தேவைகளுக்காக பின் வரும் அமைச்சுகளின் வழி ஒதுக்கீடு செய்யப்பட்டன. * பொதுச் சேவைத் துறை (JPA) 1.6 பில்லியன் (1600 கோடி) * மாரா (MARA) 2.0 பில்லியன் (2000கோடி) * உயர்கல்வி கல்வியமைச்சு (KPM(T)) வெ. 250 மில்லியன் * சுகாதாரத்துறை அமைச்சு (MOH) வெ. 208 மில்லியன் * மலேசியக் கல்வியமைச்சு (KPM) வெ. 198 மில்லியன் * மனிதவள அமைச்சு (KSM) வெ. 28 மில்லியன் * இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு (KBS) வெ. 21 மில்லியன் மேற் கண்ட உபகாரச்சம்பள வாய்ப்புகளில் (மாராவைத் தவிர) இந்திய மாணவர்களுக்கான வாய்ப்புகளை யார் ஏற்பாடு செய்வது? சரியான நடைமுறை உள்ளதா? எத்தனை பேருக்கு வழங்கப்படும் என்ற தகவலாவது உண்டா? அல்லது இத்தனை வாய்ப்புகளும் கானல் நீர்தானா? தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியத்தில் தில்லாலங்கடிகளா? 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய வெ. 860 மில்லியன் தொகை தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளின் கட்டடத்தின் உருமாற்றமும், அடிப்படை வசதிகளில் மேம்பாடுகளும் கேள்விக்குறியாகி வருவதை யாராவது மறுக்க முடியுமா? 2016 ஆம் ஆண்டிற்கான வெ. 50 மில்லியன் மானியத்தில் வெ. 16.5 மில்லியன் மானியத்தை மட்டுமே பெற முடிந்தது ம.இ.கா.வின் பல வீனமில்லையா? அதைவிட மோசமாக 2017 ஆம் ஆண்டு ஒதுக்கீடான வெ. 50 மில்லியனில் வெ. 20 மில்லியனை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் உண்மையா? என்பதை ஏவுகணை அறிய விரும்புகின்றது. 36 தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானமும் இழுத்தடிக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் தமிழ்ப்பள்ளிகளில் 2017 இல் வெ. 10 மில்லியன் மானி யத்தின் வழி அமைக்கப்பட வேண்டிய 50 பாலர் பள்ளிகளின் நிர்மாணிப்பும் தள்ளிப் போடப்பட்டிருப்பதற்கான விளக்கத்தையும் தர மனமில்லாத ம.இ.கா. வின் தலைமையிலோ அல்லது சமூகத்தின் மீது கடுகளவும் அக்கறையில்லாத உதிரிக் கட்சிகளின் தலைமைத்துவமோ பிரதமர் அறிவிக்க விருக்கும் மலேசிய இந்தியர் செயல் திட்டத்தினை (MIB) வழி நடத்தினால் இருப்பதையும் இழப்பதற்கு வழி அமையலாம் என்பதாகவே ஏவுகணை கருதுகின்றது. மலேசியப் பிரதமரின் மாபெரும் திட்டம் திமிங்கலங்களினால் வசப்படுவதைத் தவிர்க்கும் வகையில் தீர்வினை நாளை ஆராய்வோம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
3 ஆவது முறையாக தீச்சம்பவம்: இந்தியர்களுக்குச் சொந்தமான 8 வீடுகள் அழிந்தன

இந்தியன் செட்டில்மென்டில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில்

மேலும்
img
மலிவு விலை மதுபானத்தை குடித்த இரு மலேசியர் உட்பட அறுவர் மரணம்

ஜார்ஜ்டவுனில் மதுபானம் அருந்தியதால் அறுவர் மரணமடைந்துள்ள

மேலும்
img
ஓரின உறவு விவகாரம்: காணொளியில் திருத்தம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய ஊடக அமைப்பு 

அந்த காணொளியில் இருப்பவர் அஸ்மின்தான்

மேலும்
img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img