வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் இயக்குநர் கவுதமன்!
ஞாயிறு 16 ஏப்ரல் 2017 14:23:20

img

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குநர் கவுதமன், உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற் றுள்ளார். டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் கடந்த 13ம் தேதி காலை, சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் சாலையில் பூட்டு போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுதமன் உள்ளிட்ட 7 பேரை பரங்கிமலை போலீசார் கைது செய்தனர். அனைவரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் அன்று இரவே புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கவுதமன் மற்றும அவர் உடன் இருந்த ஆறு மாணவர்களும் சிறையில் இருந்தபடியே கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். சிறையில் அளிக்கும் உணவை சாப்பிட மறுத்தனர். உண்ணாவிரதத்தை கைவி டும்படி சிறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் கவுதமன் உள்ளிட்ட ஏழு பேரும் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக இன்று காலை அறிவித்துள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img