ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

சாலட் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார் நம் தமிழர்!
ஞாயிறு 16 ஏப்ரல் 2017 11:24:20

img

சாலட் எனும் காய்கறிகள் அல்லது பழங்களின் கல வையை தயார் செய்யக்கூடிய இயந்திரமொன்றை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார் ஒரு மலேசியரான கதிர்குகன் கதிரேசன். செலி என்றழைக்கப்படும் அந்த சாலட் இயந்திரத்தை உருவாக்குவதில் கதிர்குகன் முக்கியமான பங்கினை ஆற்றி யுள்ளார். நேற்று முன் தினம், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கால்வனைஸ் எனுமிடத்தில் அந்த இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. உலகிலேயே இதுவே இம்மாதிரியான முதல் இயந் திரமாகும் என்று நம்பப் படுகிறது. மொத்தம் 21 வகையான உணவு பொருள்களை (காய்கறி கள், பழங்கள் உட்பட) பயன்படுத்தி, ஆயிரத்துக்கும் மேற் பட்ட வெவ்வேறு வகையான சாலட் உணவுகளை இந்த இயந்தி ரத்தால் உருவாக்க முடியும். ஒவ்வொன்றுக்கும் தேவைப்படும் நேரம் ஒரு நிமிடம் ஆகும். வாடிக் கையாளர்கள் தாங்கள் விரும்பும் சாலட் வகையை தேர்வு செய்து, அதற்கான பட்டன்களை தட்டினால் போதும், சாலட் ரெடி! இந்த இயந்திரத்தின் கண்டு பிடிப்பில் சம்பந்தப்பட்டுள்ள, கலிபோர்னியாவில் தலைமையகத் தைக் கொண்டுள்ள சோவ்போட் டிக்ஸ் எனும் நிறுவனம், கூடிய விரைவில் சீன, மெக்சிகோ மற்றும் இந்திய உணவுகளை தயார் செய்யும் இயந்திரங்களையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லா சாலே பள்ளிக்கூடம், பண்டார் கின்றாரா செக்ஷன் 4 இடை நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான கதிர்குகன் (26) அமெரிக்காவின் நெப்ராஸ்கா லிங்கன் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் டிகிரி பட்டம் பெற்றவர். அலுவலக பணியாளர்களுக்கு விரைவான, ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்பதே தங்களின் இந்த கண்டுபிடிப்பின் நோக்கமாகும் என்று சோவ்போட்டிக்ஸ் நிறுவன தலைமை செயல்முறை அதிகாரி தீபக் சேகர் கூறினார். இவ்வாண்டு மட்டும் கலிபோர்னியாவின் முக்கியமான அலுவலகப் பகுதிகளில் 125 சாலட் தயாரிக்கும் இயந்திரங்களை தாங்கள் பொருத்தவிருப்பதாகவும் அவர் சொன்னதாக பிஸ்னஸ் இன் சைடர் செய்தி வெளியிட் டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img