புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

இன்னும் ஒரு மாத கால அவகாசம்தான்!
சனி 15 ஏப்ரல் 2017 12:52:08

img

இங்குள்ள ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை அந்த இடத்திலிருந்து வெளியேறக் கோலாலம் பூர் மாநகர் மன்றம் அவர்களுக்கு மேலும் 1 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது. அங்குப் புதிய மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து காலி செய்யுமாறும் ஏப்ரல் 14ஆம் தேதி அங்குள்ள வீடுகள் உடைக்கப்படும் எனவும் கூறி கோலாலம்பூர் மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இதற்கு முன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனிடையே, அங்குள்ள பொதுமக்களின் பிரதிநிதியான பொன்னம்பலம் தலைமையில் சிலர் டிபிகேஎல்லுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப் படையில் அந்த இடத்தைக் காலி செய்ய அவர்களுக்கு மேலும் 1 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகள் உடைக்கப்படுவது 1 மாத காலத்திற்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் எனப் பொன்னம்பலம் தெரிவித்தார். இந்த இடத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள எவ்வித தடையையும் நாங்கள் விதிக்கவில்லை. அவர்களோடு மல்லுக்கு நிற்கவும் விரும்ப வில்லை. ஆனால், நிலத்தை எடுத்துக் கொள்வ தற்கு முன்பு நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை கள் நிறைவேற்றப்பட வேண்டும் என அங்குள்ள பொது மக்கள் கேட்டுக்கொண்டனர். முதலாவதாக, எங்களுக்கான வீட்டைக் கட்டிக் கொடுத்துவிட்ட பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் நிலத்தை எடுத்துக்கொள்ள இயலும். கட்டிக் கொடுக்கப் படும் வீடுகள் உரிமையாளர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட வேண்டும். பிறருக்கு வெ.42,000க்கு வழங்கப்பட வேண்டும். புதிதாகக் கட்டப்படும் வீடுகள் 1,050 சதுர அடிகளில் அமைந் திருக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர். இதனிடையே, இவ்விவகாரத்தில் நியாய மான தீர்ப்பு கிடைக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலை யிடக் கோரி இம் மாதத் தொடக்கத்தில் புத்ராஜெயாவில் அமைதி மறியலில் ஈடுபட்டதோடு பிரதமர் செயலாளரிடம் இது குறித்த மகஜரையும் வழங்கி உள்ளனர். எது எப்படியாயினும், வீட்டைக் கட்டித் தரப்படுவதற்கு முன்பு இங்கிருந்து செல்வதில்லை என இங்குள்ள பொதுமக்கள் ஏகமனதாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img