செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

கணவரை வீட்டை விட்டு வெளியேற்றிய தீபா!
சனி 15 ஏப்ரல் 2017 11:24:44

img

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா, தன் கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனர் சரண்யா என்பவரும், செயலாளராக தீபாவின் கார் ஓட்டுநர் ஏ.வி.ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்குப் பதவி அளித்ததற்கு, தீபாவின் கணவர் மாதவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்ததாராம். 'தான் கூறும் நபர்களுக்கே கட்சியில் பதவி கொடுக்க வேண்டும் ' என்று தீபாவுக்கு மாதவன் நெருக்கடி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தீபா, மாதவனை ஓரம்கட்டினார். ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட தீபா, தனது வேட்பு மனுவில் கணவர் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. பின்னர், மாதவன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தீயவர்கள் தீபாவுக்ந்த் துணையாக இருக்கிறார்கள் என்பது மாதவன் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த நிலையில், தியாகராயர் நகரில் உள்ள தீபா வீட்டுக்கு நேற்று தனது ஆதரவாளர்களுடன் வந்த மாதவன், தீபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். 'எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்' என பதில் கூறிய தீபா, மாதவனை வீட்டை விட்டு வெளியேற்றி , அவரை மீண்டும் வீட்டுக்குள் விடவேண்டாம் என காவலாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், தீபா ஆதரவாளர்களுக்கும் மாதவன் ஆதரவாளர்ளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் கையில் கிடைத்ததைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். சம்பவம் பற்றி கேள்விபட்ட போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img