புதன் 14, நவம்பர் 2018  
img
img

ஒரு நடிகைக்கு நேரம் ஒதுக்கத் தெரிந்த பிரதமருக்கு, விவசாயிகளைச் சந்திக்க நேரம் இல்லையா?
வியாழன் 13 ஏப்ரல் 2017 17:51:09

img

கடந்த 30 நாட்களாக நடைபெற்றுவந்த போராட்டத்தின் உச்சமாக விவசாயிகள் நிர்வாணப் போராட்டத்தை நடத்தினர். அப்போதும் ஆளும் வர்க்கம் திரும் பிப் பார்க்கவில்லை. ஒரு நடிகைக்கு நேரம் ஒதுக்கத் தெரிந்த பிரதமருக்கு, தலைநகரில் வந்து போராடும் விவசாயிகளைச் சந்திக்க நேரம் இல்லையா? என்கிறார் இயக்குநர் கௌதமன். பிரதமரைச் சந்திக்க அழைத்துச்செல்வதாகக் கூறி... விவசாயிகளை அழைத்துச் சென்று, அங்கிருந்த காவல் ஆய்வாளரை மட்டும் சந்திக் கவைத்து விட்டு... பிறகு அவர்களை நிர்வாணமாகத் துரத்திவிட்டனர். விவசாயிகளின் நலனுக்காக மகாத்மா காந்தி போராட்டம் நடத்தி 100 ஆண்டுகள் எட்டப் போகின்றன. அப்போது பேசிய மகாத்மா காந்தி, 'இந்தத் தேசத்தின் முதுகெலும்பு விவசாயிகள்' என்று முழங்கினார். அவர் கூறிய அந்த முதுகெலும் பைத்தான் தற்போது முறித்து அழித்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவற்றையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. சாமியார் ஒருவர் காட்டை அழித்து, சிலைநிறுவிய நிகழ்வுக்கு மிகவும் மகிழ்ச்சியாக வந்து பங்கேற்றுவிட்டுச் செல்கிறார் பிரதமர். அதேபோன்று, எந்தக் காரணம் சொல்லாமல் ஒரு நடிகைக்கு நேரம் ஒதுக்கத் தெரிந்த பிரதமருக்கு, தலைநகரில் வந்து போராடும் விவசாயிகளைச் சந் திக்க நேரம் இல்லையா? இந்தத் தேசத்தை எதிர்த்து இனியும் போராடாமல் இருந்தால், எங்கள் இனம் அழிந்துவிடும். அதன் காரணமாகத்தான் போராட் டத்தை நடத்தியுள்ளோம் என்கிறார் இயக்குநர் கௌதமன். முன்னறிவிப்பின்றி இந்தப் போராட்டத்தை நடத்தக் காரணம் கையாலாகாத அரசாகத் தமிழக அரசு உள்ளது. மத்திய அரசை எதிர்த்து கேள்வி எழுப் பினால், வருமானவரித் துறை அதிகாரிகளை ரெய்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் வேண்டுமானால் பயப்படலாம். தமிழக மக்கள் பயப்படவேண்டிய எந்த அவசியமும் இல்லை. எங்களைப் பாதுகாப்பதற்குத்தானே தமிழக அரசே தவிர, அவர்கள் செய்யும் ஊழல்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அல்ல. ஏற்கெனவே ஏப்ரல் நான்காம் தேதி விவசாயிகளுக்காக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோது காவல் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதனால்தான் தற்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தை நடத்தினோம். இனியும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமல் தமிழக அரசு ஒதுங்கிப்போனால் அது அரசு அல்ல... அதற்குப் பெயர் பிணம். தமிழக எம்.பி-க்கள் இந்நேரம் நாடாளுமன்றத்தை முடக்கி இருக்க வேண்டாமா... எதற்காக நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்கள்? விமானத்தில் ஏறிப் போய்க் கையெழுத்துப் போட்டுவிட்டுச் சாப்பிடுவதற்காக அல்ல... இனிமேலாவது, டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்கள் களத்தில் இறங்கவேண்டும். ஜல்லிக்கட்டுக் போராட்டத்துக்கு நடந்ததைப்போன்று இளைஞர்கள் இந்தப் போராட்டத்துக்கும் ஒன்றிணைய வேண்டும்'' என்றபோது அவருடைய அழைப்புத் துண்டிக்கப்பட்டது.பின்னர், விசாரித்ததில் அவருடைய போனைப் போலீஸார் பிடுங்கிச்சென்றது தெரிய வந் தது. கைதுசெய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து15 நாள்கள் சிறையில் அடைக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களின் இந்தப் போராட்டம் குறித்து போலீசாரும் உளவுப்பிரிவு அதிகாரிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, இந்தப் போராட்டம் குறித்து விரிவான விசாரணையை அவர்கள் முடுக்கிவிட்டுள்ளனர். வேறு எந்த இடத்திலும் மீண்டும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடாத வாறு போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் இறங்கியுள்ளனர். போராட்டம் நடந்த இடத்தில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்கிறார் இயக்கு நர் கௌதமன்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img