சனி 22, செப்டம்பர் 2018  
img
img

சிலாங்கூரில் கோயில் தொடர்பான சர்ச்சை தற்காலிக நிறுத்தம்!
வியாழன் 13 ஏப்ரல் 2017 16:11:08

img

சிலாங்கூர் மாநிலத்தில் கோயில்கள் உட்பட முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான மாநில அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய கடும் விதிமுறைகளின் அமலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு மாநில அரசாங்கம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டு இடங்கள் தொடர்பில் சிலாங்கூரின் வழிகாட்டல் கையேடு, மாநில திட்டமிடல் நடைமுறையின் சர்ச்சைக்குரிய பல உட்பிரிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில அரசு தீர்மானித்துள்ளது என ஆட்சிக் குழு மூத்த உறுப்பினர்கள் டத்தோ தெங் சாங் கிம் நேற்று கூறியுள்ளார். சிலாங்கூர் மாநில அரசு எல்லா சமயங்களையும் மதிக்கிறது. மாநிலக் கொள்கைகள் அதற்கேற்றதாக செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டிடங்கள் தொடர்பில் பல வழிமுறைகள் கட்டுப்பாட்டுத் தன்மையுடன் உள்ளன. அந்த வழிகாட்டி அம்சங்கள் பாகுபாடான மற்றும் முரண்பாடானவையாக கருதப்படுகின்றன. முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டு இடங்களை நிர்மாணிக்கும்போது இஸ்லாமி யரின் வீட்டிலிருந்து 50 மீட்டர் பகுதியில் கட்டக் கூடாது; 200 மீட்டர் சுற்றளவிலுள்ள குடியிருப்புவாசிகளிடம் அனுமதி பெற வேண்டும். அருகிலுள்ள மசூதியின் உயரத்தைவிட கூடுதல் உயரத்திற்கு கோபுரம் அமைக்கப்படக்கூடாது போன்ற கடுமையான உட்பிரிவுகளை சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடந்த ஜனவரி முதல் அமல்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பில் சிலாங்கூர் மசீச உட்பட இந்திய அமைப்புகளும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்துள்ளன. அதிலுள்ள பாகுபாட்டு அம்சங்களை இரு வாரங்களில் சரிசெய்ய வேண்டும். இல்லையேல் அவற்றை ஆட்சேபித்து நீதித்துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பிக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது. எனினும் கடந்த ஆண்டு இந்த சட்டவிதிகள் மீதான நகல் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை முழுமையாக படிக்காமல் கையெழுத்திட்டு விட்டதாகவும் இத்தகைய தவறு நேர்ந்ததற்கு தாமே பொறுப்பேற்பதாக தெங் நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார். அதேவேளையில் இது தொடர் பாக புதன்கிழமை மாநில அரசாங்கம் முக்கிய முடிவெடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img