திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

15 வயது தமிழ் மாணவி பாலியல் பலாத்காரம்!
வியாழன் 13 ஏப்ரல் 2017 15:31:46

img

சிரம்பான் போலீஸ் அதிகாரி ஒருவர், தனக்கு அறிமுகமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியச் சம்பவம் நேற்று அம்பலத்திற்கு வந்தது. புக்கிட் கெப்பாயாங் சட்டமன்ற உறுப்பினர் சா கீ சீன் இவ்விவகாரம் குறித்து பத்திரிகையாளர் கள் சந்திப்பில் நேற்று தெரி வித்தார். சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி சிரம்பான் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் என்றும் அம்மாணவியின் குடும்பத்திற்கு சுமார் 13 ஆண் டுகள் பழக்கமுடையவர் என்றும் கீ கூறினார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அவர் விவரிக்கையில்: கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி இரவு, அம்மாணவி தனது தந்தை, அந்த போலீஸ் அதிகாரி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் ஓர் உணவகத்தில் இரவு உணவருந்தச் சென்றார். உணவு முடிந்து அவர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பிய பிறகு சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி மட்டும் இரவு 10.00 மணிக்கு தனியாக அந்த வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அந்த மாணவியின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக மாத்திரைகளை உட்கொண்ட பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் இருந் திருக்கிறார். அந்த நேரம் பார்த்து, அங்கு வந்த அந்த போலீஸ் அதிகாரி அந்த மாணவியின் அறைக்குள் நுழைந்து, அவரை வலுக்கட்டாயமாக சமையல் அறைக்கு இழுத்துச் சென்று, கைகளை கட்டி விட்டு அம்மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கீ குறிப்பிட்டார். இச்சம்பவம் குறித்து இரண்டு நாட்களுக்குப் பிறகே அம்மாணவி தன் தந்தையிடம் கூறியிருக்கிறார். தொடர்ந்து, சிரம்பான் போலீஸ் நிலையத்தில் இது பற்றி புகார் செய்யப்பட்டதுடன், அம்மாணவி பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தான் முறையாகப் போலீஸ் புகார் செய்தும் அந்த அதிகாரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதை அந்த தந்தை வேதனையுடன் கூறியதாக அவர் சொன்னார். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இப்பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சா கீ சீன், ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் சு.வீரப்பன், ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோஸ்பின் ஆகியோர் வலியுறுத்தினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்

ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம்

மேலும்
img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img