ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

முஸ்லிம் அல்லாதர்களுக்கு மட்டும் சிலாங்கூர் அரசு விதிக்கும் 3 கடுமையான விதிமுறை!
புதன் 12 ஏப்ரல் 2017 12:43:56

img

கோயில்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதிக்கும் உரிமை சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு இல்லை. வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு வழங்கிய பரிந்துரையை ஒரு வழிகாட்டியாக சிலாங்கூர் அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதனை ஒரு சட்டம் போல் பிரயோகிக்க மாநில அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கோயில் உட்பட முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் விதித்துள்ள மூன்று கடுமையான விதிமுறைகளானது, கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சமய சுதந்திர ஷரத்திற்கு முரணாக இருக்கிறது என்பதை ஜ.செ.க.வை சேர்ந்த மாநில ஆட் சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் ஒப்புக்கொண்டுள்ளார். அவை விதிமுறைகளாக கொண்டு வரப்படுவதற்கு முன்பு அந்த நகலில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை பார்க்காமலேயே அதில் தாம் கையெழுத்திட் டுள்ளதாகவும் அதற்காக தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகவும் தாம் தயாராக இருப்பதாகவும் தெங் சாங் கிட் தெரிவித்து இருப்பது அப்படியொரு கடுமையான விதிமுறைகளை மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளது. ஒரு வட்டாரத்தில் வாழும் பெரும்பான்மையான மக்களின் உணர்வை அடிப்படையாக கொண்டு சில பரிந்துரைகளை வழங்குவதில் தவறில்லை. ஆனால், அதுவே பிற மதத்தினரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் தன்மையில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் அவை ஒரு வழிமுறையே தவிர சட்டம் கிடையாது என்று அந்த சட்ட நிபுணர் கூறுகிறார். முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக இவ்வாண்டு முதல் தேதியிலிருந்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமல்படுத்தியுள்ள புதிய கடும் விதிமுறைகளுக்கு எதிராக பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் அரசு சாரா இயக்கங்களும் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். மாநிலத்தில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு விதித்திருந்த புதிய விதிமுறைகளில் கீழ்க்காண்பவை அடங்கும்: * வர்த்தகப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்க முடியாது; * முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளில் 50 மீட்டருக்கு உட்பட்ட எல்லையில் அவற்றை அமைக்க முடியாது; * பல்லின மக்கள் வாழும் இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டும்போது 200 மீட்டர் தூரம் எல்லை வரை உள்ள மக்களின் அனுமதியைப் பெற வேண்டும்; * அதன் கோபுரங்கள் அருகிலுள்ள பள்ளிவாசலின் உயரத்துக்கு மேல் போகக்கூடாது ஆகியனவாகும். இந்த சர்ச்சைக்குரிய விதிமுறைகளுக்குப் பொறுப்பானவர் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ தெங் சாங் கிம். இந்த சர்ச்சைக்குப் பொறுப்பேற்று, அவற்றை திருத்தியமைக்க தாம் தயார் என்றும், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு போதிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாக கூறியிருக்கிறார். மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அ. வைத்திலிங்கம் கூறுகையில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக கருத்திணக்க அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவை பரிசீலனைக்காக ஒரு வழிகாட்டியாக கொள்ளும்படி பரிந்துரைக்கப்பட்டதே தவிர அது சட்டம் அல்ல என்றார். சட்டங்கள் இயற்றுவது என்பது நாடாளுமன்றத்தினால் மட்டுமே முடியும். முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது இது போன்ற விதி முறைகளை திணிப்பதற்கு அவை சட்டம் அல்ல என்பதையும் வைத்திலிங்கம் விளக்கினார். 1980 ஆம் ஆண்டு இது போன்ற உத்தேச மசோதா பரிந்துரையை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் வாயிலாக அரசாங்கம் கொண்டு வந்தது. ஆனால், சர்வ சமய மன்றம் இதனை எதிர்த்து நாடு தழுவிய நிலையில் கிட்டத்தட்ட 10 லட்சம் கையெழுத்து வேட்டையை நடத்தியதன் விளைவாக அந்த மசோதாவை அரசாங்கம் மீட்டுக்கொண்டது. அந்த மசோதா நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்பதை வைத்திலிங்கம் நினைவு கூர்ந்தார். வழிகாட்டிகளை கண்காணிக்க மட்டுமே மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கிறதே தவிர சட்ட விதிமுறையாக அமல்படுத்துவதற்கு அல்ல என்பதையும் அவர் விளக்கினார். 2007 முதல் 2009 வரையில் மலேசிய இந்து சங்கத் தலைவராக நான் இருந்த போது இந்த விவகாரம் தொடர்பாக சர்வ சமய மன்றத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள ஒவ்வொரு மதத்தினரின் பிரதிநிதியுடன் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு கலந்தாலோசனை நடத்தியது. பரிசீலனைக்காக மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டி முறையை சமர்ப்பிப்பது என்று அந்த கலந்தாய்வில் ஏகமனதாக இணக்கம் காணப்பட்டது. அதன் அடிப்படையில் அந்தந்த மாநில அரசாங்கத்திற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு அந்த வழிகாட்டி முறையை அனுப்பியது. ஆனால் எந்த நிலையிலும் ஒரு வழிபாட்டுத் தலம் இவ்வளவு உயரத்திற்கு கட்டப்பட வேண்டும், இவ்வளவு குறைவாக கட்டப்பட வேண்டும் என்று அந்த வழிகாட்டி குறிப்பிடவில்லை என்று வைத்திலிங்கம் தெளிவுப்படுத்தினார்.எனவே இந்த விவகாரத்தை சர்வ சமய மன்றம் உடனடியாக வீட மைப்பு ஊராட்சித்துறை அமைச்சுக்கும் மற்றும் மாநில அரசாங்கத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். நடப்பு நிலையை விளக்க இது அவசியமாகும் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img