செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

கோவில்களுக்கு தடை!
செவ்வாய் 11 ஏப்ரல் 2017 16:09:05

img

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு புதிய விதிமுறைகளை திணிப்பதன் வழி, டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தலைமை யிலான சிலாங்கூர் மாநில அரசாங்கம் அம்மாநில இந்துக்களை ஓரங்கட்டப் பார்க்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்து ஆலயங்களை கட்டு வதற்கு சர்ச்சைக்குரிய வகையில் விதிமுறைகளை அம்மாநில அரசாங்கம் வெளியிட்டிருந்தது இதனை நிரூபிக்கும் வகையில் உள்ளது. சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்த விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும் என்று நில அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், அரசியல் கட்சிகள், அரசு சாரா இயக்கங்கள் உட்பட பலரும் இதற்கு கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். மாநிலத்தில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு விதித்திருந்த புதிய விதிமுறைகளில் கீழ்க்காண்பவை அடங்கும்: * வர்த்தகப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்க முடியாது; * முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளில் 50 மீட்டருக்கு உட்பட்ட எல்லையில் அவற்றை அமைக்க முடியாது; * பல்லின மக்கள் வாழும் இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டும்போது 200 மீட்டர் தூரம் எல்லை வரை உள்ள மக்களின் அனுமதியைப் பெற வேண்டும்; * அதன் கோபுரங்கள் அருகிலுள்ள பள்ளிவாசலின் உயரத்துக்கு மேல் போகக்கூடாது ஆகியனவாகும். இந்த சர்ச்சைக்குரிய விதிமுறைகளுக்குப் பொறுப்பானவர் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ தெங் சாங் கிம். இந்த சர்ச்சைக்குப் பொறுப்பேற்று, அவற்றை திருத்தியமைக்க தாம் தயார் என்றும், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு போதிய விளக்கம் அளிக்கப்படும் என் றும் அவர் பகிரங்கமாக கூறியிருந்த போதிலும், முதற்கண் இந்த தவறு நடந்திருக்கக் கூடாது என்று ம.சீ.ச., ம.இ.கா. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அரசு சாரா இயக்கங்களும் கருத்துரைத்தன. இந்த புதிய விதிமுறைகளின் வழி ஆலயங்களும், தேவாலயங்களும் சேரிகளில்தான் செயல்பட வேண்டும் என்று சிலாங்கூர் அரசாங்கம் கூறுகின்றதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிலாங்கூர் ம.சீ.ச. செயலாளர் இங் சோக் சின். இந்த புதிய விதிமுறைகள் தவறென்று சொல்லி மன்னிப்புக் கேட்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் இம்மாதிரியான விதிமுறைகளுக்கு தேவைதான் என்ன என்று அவர் வினவினார். மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை மாநில அரசு ஓரங்கட்ட நினைக்கின்றது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. பி.கே.ஆர் தலைமையிலான மாநில அரசாங்கம் முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் பிரித்தாள நினைக்கின்றது என்றும் அவர் கூறினார். சிலாங்கூர் மாநில அர சாங்கத்தில் 14 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் நால்வர் முஸ்லிம் அல்லாதவர்கள். மூவர் ஜ.செ.க பிரதிநிதிகள். ஒருவர் பி.கே. ஆர். கட்சியைச் சேர்ந்தவர். சபாநாயகரும் ஜ.செ.க வைச் சேர்ந்தவர். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் ஆட்சிக்குழு பிரதிநிதித்துவம் அதிகமாக ஜ.செ.. க.வையே சார்ந்துள்ளது. இவர்களில் ஒருவர் கூட தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அந்த முரணான விதிமுறைகளை தடுத்திருக்க முடியாதா? ஜ.செ.க., பி.கே.ஆர் கட்சிகளின் முஸ்லிம் அல்லாத பிரதிநிதிகளும் தன்னை ஒரு மிதவாத முஸ்லிம் கட்சி என்று கூறிக்கொள்ளும் அமானாவும் ஏன் இவ்விஷயத்தில் மௌனம் சாதித்தன என்பது ம.சீ.ச.விற்கே அதிர்ச்சியாக இருக்கிறது என்று இங் மேலும் கூறினார். பதவி விலக வேண்டும்: இதனிடையே, சிலாங்கூரில் முஸ்லிம் அல்லாதவர்களின் நலன்களை பாதுகாக்கத் தவறியுள்ள சிலாங்கூர் மாநில ஜ.செ.க தலைமைத்துவம் ஒட்டுமொத்தமாக பதவி விலக வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் வலியுறுத்தியுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய விதிமுறைகள் விவகாரத்தில் தாங்கள் தவறு இழைத்து விட்டதை தெங் சாங் கிம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். மாநில தலைவர் டோனி புவா உள்ளிட்ட அனைவரும் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றார் அவர். பலவீனமான கட்சி -சிவராஜ்: சிலாங்கூரில் ஒரு பலவீனமான கட்சி என்பதை ஜ.செ.க நிரூபித்துள்ளது என்று ம.இ.கா. இளைஞர் அணி தலைவர் டத்தோ சி.சிவராஜ் கூறினார். இந்த தவறுக்கு மாநில அரசாங்கத்தையும் அவர் சாடினார். ஜ.செ.க. மட்டுமின்றி, மொத்தத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஜ.செ.க., பி.கே.ஆரில் உள்ள முஸ்லிம் அல்லாத தலைவர்கள் எங்கே, அவர்கள் மௌனம் சாதிப்பது ஏன் என்று வினவினார்.இது ஒட்டுமொத்த துரோகச் செயல் என்று ஓர் அரசு சாரா இயக்கத்தின் தலைவரான அந்தோணி தனாசயன் வர்ணித்தார். தெங் எப்படி படிக்காமல் அந்த விதிமுறைகளை அங்கீகரித்து கையொப்பம் இட்டார் என்று அவர் கேள்வி எழுப்பினார். பதவி விலகுவதற்கு தயார்: இந்த சர்ச்சைக்கு காரணமான சிலாங்கூர் மாநில மூத்த ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம், முஸ்லிம் அல்லாத வர்க ளின் வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய விதிமுறைகளுக்காக மன்னிப்புக் கேட்டு, தாம் பதவி விலக முன் வந்துள் ளார். இவ்விவகாரத்தை ஒத்தி வைக்கும்படி புதன்கிழமை கூடவிருக்கும் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் தாம் கோரவிருப்பதாக அவர் சொன்னார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img