img
img

அம்பர் தெனாங் தமிழ்ப்பள்ளி திடல் பறிபோகும் அபாயம்!
திங்கள் 10 ஏப்ரல் 2017 14:27:43

img

நாட்டில் ரப்பர் ஏற்றுமதிக்கு பெரும் பங்காற்றிய இந்தியர்கள் அதிகமானோர் வாழ்ந்த டிங்கில் அம்பர் தெனாங் தோட் டத்திலுள்ள தமிழ்ப்பள்ளிக்கான திடலை, மேம் பாட்டு நிறுவனமான சைம் டார்பி நிறுவனம் மீட்டுக்கொள்ள கடிதம் வழங்கியிருக்கும் தகவல் உண்மையானால் அதற்கான காரணகர்த்தா யார் என்பதை மலேசிய இந்தியர்களோடு நண்பன் குழுவும் அறிந்து கொள்ள விரும்புகின்றது. மலேசியாவில் 60 ஆண்டுகளாக சுதந்திரத்திற்குப் பின்னரும் தமிழ்ப் பள்ளியை மையமாக வைத்து அரசியல் சித்து விளையாட்டினை நகர்த்தி வரும் மஇகாவின் செயல்பாடுகளினால் அம்பார் தெனாங் தமிழ்ப்பள்ளிக்கான திடலை சம்பந்தப்பட்ட நிறுவனம் மீட்டுக் கொள்வதற்கு கடிதம் வழங்கியிருப் பதாக கூறப்படுவது உண்மையா? நில உரிமை நிரந்தரமா?: டெங்கில் அம்பார் தெனாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மேம்பாட்டு நிறுவனம் வழங்கி யிருக்கும் தற்போதைய இடம் நிரந்த ரமானதா என்ற கேள்விக்கு நண்பன் குழு விடை தேட விழைகின்றது. மேலும் அம்பார் தெனாங் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நில அளவிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவே நண்பன் குழு அறிகின்றது. *டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் உசேன் ஓன் 13.8.2008 ஆம் தேதியிடப்பட்ட Tmp pk (CSR) 1/1 Dd 1 என்ற கடிதத்தின் வழி அம்பார் தெனாங் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற தகவல் இருந்துள்ளது. *டத்தோ கோகிலன் பிள்ளை 20.8.2008ஆம் நாள் தேதியிடப்பட்ட குஙக/79/8/2008 என்ற கடிதத்தின் வழி மேம்பாட்டு நிறுவனம் 2.5 ஏக்கர் நிலப் பரப்பினை ஏற்பாடு செய்வதாகவும் (வழங்கவில்லை) (ஞஞுணூண்ஞுணாதடீத தணணாதடு ட்ஞுணதூஞுஞீடிச்டுச்ண ஞதடுச்ண ட்ஞுட்ஞஞுணூடி) பள்ளி யின் திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி தருவதாகவும் குறிப்பிடப்பட் டிருந்தது. *ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் 2.4.2017ஆம் பத்திரிகை அறிக்கையின் வழி (மலேசிய நண்பன் அல்ல) டெங்கில் அம்பார் தெனாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 3.9 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறியிருந்தார். மேற்கண்ட மூன்று வகையான செய்திகள் அம்பார் தெனாங் பகுதியில் வாழும் இந்தியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதோடு தமிழ்ப் பள்ளியை மைய மாக வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் அரசியல் நடத்தி வருகின்றனரா என்ற கேள்வி எழுந்திருப்பது நியாயமாகவே நண்பன் குழு கருதுகின்றது! கேள்விகளுக்கு பதில் வருமா? * டெங்கில் அம்பார் தெனாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு; * அம்பார் தெனாங் மஇகா முழுமையான பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுமா? * தமிழ்ப் பள்ளிக்கான நிலத்தில் ஆலயத்தினை அமைப்பதற்கான முடிவினை யார் எடுத்தது? * தமிழ்ப் பள்ளிக்கான திடல் வசதியை ஏன் மஇகா கேட்டுப் பெறவில்லை! * சிலாங்கூர் மாநில மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் கலங்கிய நீரில் மீன் பிடிக்கின்றாரா? * தமிழ்ப் பள்ளிக்கான நிலத்தின் அளவுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றதே ஏன்? போன்ற அவசியமான அவசரமான கேள்விகளுக்கு மஇகா பொறுப்போடும், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் நிதானத்தோடும் பதில் தருவார் களா? என நண்பன் குழு காத்திருக்கின்றது!

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img