திங்கள் 17, ஜூன் 2019  
img
img

சிறுநீரக கோளாறினால் 30 லட்சம் மலேசியர்கள் பாதிப்பு!
திங்கள் 10 ஏப்ரல் 2017 14:09:28

img

தற்சமயம் 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் மலேசியர்கள் கடுமையான சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஏறுமுகம் காணும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இது ஒரு மௌன கொடிய நோய். ஒவ்வொரு 100 மலேசியர்களில் ஒன்பது பேர் இந்த சிறுநீரக நோயினால் பீடிக்கப்படுகின்றனர். நாள்பட்ட சிறுநீரக நோய் ஐந்து கட்டங்களைக் கொண்டுள்ளது. துவக்கக் கட்டத்தில் இதன் அறிகுறிகள் தெளிவாக தெரியாது. அநேக நோயாளிகள் 5 ஆவது கட்டத்தில் இருக்கிறார்கள். இது இறுதி கட்ட சிறுநீரக நோய். இதனை சிறுநீரக செயலிழப்பு என்றும் கூறுவார்கள். இவர்கள் உயிர் வாழ்வதற்கு சிறுநீரக சுத்திகரிப்பு தேவைப்படுகிறது. தற்சமயம் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 40,000. இப்பிரச் சினைக்கு உருப்படியான பரிகாரம் காணப்படாவிட்டால் 2040 ஆண்டு வாக்கில் இதன் எண்ணிக்கை இரட்டிப்பாக ஆகலாம். இதன் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆறாயிரத்து 249ஆக ஆகலாம். உலகத்தில் அதிகமாக சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் நாடு களில் மலேசியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. பல சிறுநீரக நோயாளிகளுக் கான உகந்த பரிகாரம் சிறுநீரக உறுப்பு மாற்றம். சிறுநீரக தானத்திற்காக 20,000 பேரில் பெரும்பாலோர் காத்திருக்கின்றனர். எனினும் சிறு நீரக தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைவு. அதிகமான சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கான மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்த சுகாதார அமைச்சு திட்ட மிட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் துணை தலைமை இயக்குனர் டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரை தெரிவித்தார். நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சையை விட சிறுநீரக மாற்று சிகிச்சை என்பது குறைந்த செலவினம் கொண்டதாக இருக்கும். சிறுநீரக மாற்று சிகிச்சை என்பது நாம் எதிர்நோக்கும் சவால் என்பதால் சிறுநீரக மாற்றத்தை மேற் கொள்வதற்கு அதிகமான நிபுணர்கள் தேவைப்படுகிறார் கள். சிறுநீரக மாற்றம் என்ற சிகிச்சையினை மேற்கொள்வதில் பல நிபுணர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் சுகாதார அமைச்சு உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு நிபுணர்களின் உதவியினை நாடும். சிறுநீரக தானம் என்பது மனித குலம் வழங்கும் உன்னத பரிசு. மலேசியர்களில் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இவ்வித தானம் செய்கிறார்கள் என்று டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரை தெரிவித்தார். குடும்பத்தில் உள்ள ஒருவர் மற்றொரு குடும்ப உறுப்பினர்களுக்கு சிறுநீரக தானம் செய்கிறார். எனினும் வெளியே ஒருவர் தானம் செய்யும் சிறு நீரக மானது அந்த நோயாளிக்கு ஒத்து வருமா என்பதும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. ஒரு சிறுநீரக சுத்திகரிப்பு சாதனத்தின் விலை 19,000 வெள்ளி. இது குறித்து பிரதமர் தமது பட்ஜெட் உரையில் அறிவிப்பு செய்தார். தற்சமயம் வீட்டில் ஆயிரம் நோயாளிகள் இதனை பயன்படுத்தி நன்மையடைந்து வருகி றார்கள். நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது என டாக்டர் லில்லி முஷா ஆர் தெரிவித்தார். மலேசியர்கள் மத் தியில் இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. பலர் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதில்லை என்றும் அவர் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
img
நாட்டில் சாக்கடை அரசியல் நீடித்தால், அடுத்து நான்கூட பாதிப்படையலாம்

அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆபாசக் காணொளிகள்

மேலும்
img
நானும் அஸ்மினும் 4 முறை ஓரின உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அந்த காணொளி பதிவுகள் ஆன்லைனில் கசிந்து

மேலும்
img
விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்

அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img