வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

ஒருவர் பணத்தை வைத்து.... மற்றொருவர் பிணத்தை வைத்து அரசியல்..
ஞாயிறு 09 ஏப்ரல் 2017 14:37:06

img

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் பணத்தையும், பிணத்தையும் வைத்து அரசியல் செய்கின்றனர் என்று தமிழிசை குற்றம்சாட்டினார். ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும், திமுக வும் போட்டி போட்டு கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சமயம் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கோடிக்கணக்கிலான பணத்தை செலவிடுவதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. வாக்குக்கு ரூ.7000 வரை வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜெயலலிதாவின் சவப்பெட்டி போன்று மாதிரியை தயாரித்து ஓபிஎஸ் அணியினர் கடந்த வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தவுடன் அச்செயலை ஓபிஎஸ் தரப்பினர் கைவிட்டனர். பாஜக வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து இன்று ஆர்.கே.நகரில் வீதிவீதியாக தமிழிசை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவிக்கையில், அதிமுகவின் ஒரு அணியினர் பணத்தை வைத்து அரசியல் நடத்துகின்றனர், மற்றொரு அணியினர் பிணத்தைக் கொண்டு அரசியல் நடத்துகின்றனர். இந்த இரு அணிகளும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். உண்மையான அதிமுக என்பது ஜெயலலிதா மறைவோடு சென்றுவிட்டது என்றார் தமிழிசை.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img