வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

வடிவேலு, சிங்கமுத்துவுக்கு கைது ஆணை
சனி 08 ஏப்ரல் 2017 18:35:21

img

நில மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புறநகரில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சில சோத்துக்களை வாங்கினார். இந்த சோத்துக்களை மற்றொரு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, வடி வேலுவுக்கு வாங்கிக் கொடுத்தார். இந்த சோத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் வடிவேலுவுக்கு விற்பனை செயப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட கங்கா உள்பட 5 பேர் தங்கள் மீதான வழக்கை ரத்து செயக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகியோர் இடையே இருந்த பிரச்சினையை பேசி தீர்த்துக் கொண்டதாகவும், எனவே இந்த மோசடி வழக்கை ரத்து செயவேண்டும் என்றும் இருதரப்பு வக்கீல்கள் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, வடிவேலு வையும், சிங்கமுத்துவையும் ஏப்ரல் 7ஆம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவரும் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி எம்.வி. முரளி தரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது: தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்வதாக இருதரப்பினரும் கூறிய தால், அதனால் அவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டேன். ஆனால், அவர்கள் இருவரும் வரவில்லை. அதற்கு அற்பத்தனமாக காரணங்களை இருதரப் பினர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கூறுகின்றனர். அவர்கள் நேரில் ஆஜராகாதது, கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே, இந்த வழக்கை வரும் 20ஆம் தேதி தள்ளிவைக்கிறேன். அன்று பிற்பகல் 2.15 மணிக்கு வடிவேலும், சிங்கமுத்துவும் நேரில் ஆஜராக வேண்டும். அப்படி ஆஜராகவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கவும் இந்த நீதிமன்றம் தயங்காது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img