புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

லெம்பா பந்தாய் தொகுதியில் புக்கிட் அமானை கொண்டு வருவதா?
சனி 08 ஏப்ரல் 2017 14:44:34

img

கூட்டரசுப்பிரதேசத்தில் பெரிய தொகுதியாகவும் எதிர்க்கட்சியின் கோட்டையாகவும் மாறியுள்ள டத்தோஸ்ரீ அன்வாரின் புதல்வி நூருல் இஸாவை பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினராகக் கொண்டுள்ள லெம்பா பந்தாய் தொகுதிக்குள் புக்கிட் அமானை கொண்டு வருவதற்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அந்தத் தொகுதியை பி.கே.ஆரிடமிருந்து தேசிய முன்னணி கைப்பற்றும் முயற்சியா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கெனவே எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நிறைந்த வாக்குப்பகுதியாக கருதப்படும் பங்சாரை, புக்கிட் பிந்தாங் தொகுதியுடன் இணைந்த நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் இது வரை பதில் சொல்ல முடியவில்லை. இந்நிலையில் புக்கிட் அமானையும் லெம்பாபந்தாயுடன் இணைப்பதா? என்று கேட்டு லெம்பா பந்தாய் வாக் காளர்கள் 100 பேர், அவர்களின் எம்.பி. நூருல் இஸா அன்வார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தொகுதியில் எல்லைத் திருத்தம் தொடர்பில் தேர்தல் ஆணையம் (இசி) முன்வைத்துள்ள இரண்டாவது பரிந்துரைக்கு தங்கள் ஆட்சேபணை மக ஜரை எம்.பி. நூருல் இஸா தலைமையில் அந்த 100 பேரும் கூட்டரசுப் பிரதேச தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளனர். முதல் பரிந்துரைக்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாக நுருல் இஸா கூறி னார். அதில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் சில இன்னும் மாற்றப்படாமல் அப்படியே இருக்கின்றன என்றார் அவர்.அவற்றுள் ஒன்று புக்கிட் அமான். இப்போது சிகாம்புட் தொகுதியில் உள்ள அது தொகுதி எல்லைச் சீரமைப்பின் கீழ் லெம்பா பந்தாய் தொகுதியில் வருகிறது. கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? புக்கிட் அமான், லெம்பா பந்தாய் தொகுதிக்கு அருகில்கூட இல்லை. இந்த அடிப்படை தகவலை இசி-க்குப் படித்துப் படித்துச் சொல்ல வேண்டியுள்ளது என்று நூருல் இஸா செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கு ஒரு தெளிவான விளக்கம் தேவை என்றும் அவர் கோரினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நியத் தொழிலாளர்களுக்கான வெ.10,000 லெவி கட்டணத்தை முதலாளிகளே  செலுத்த வேண்டும்

திறன்மிக்க அந்நியத் தொழிலாளர்களுக்கான

மேலும்
img
ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆயுள் தண்டனை தேவையில்லை.

எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்

மேலும்
img
போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்.

அத்தொகுதி காலியாக்கப்பட்ட விதம் ஜனநாயகக்

மேலும்
img
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஓராண்டு லெவி கட்டணம் வெ.10,000.

அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதி ஆதாயங்களில்

மேலும்
img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img