வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

பாலியல் பலாத்காரம் புரிந்தவனே மாப்பிள்ளையா?
வெள்ளி 07 ஏப்ரல் 2017 13:29:44

img

தாசேக் குளுகோர் எம்.பி. கூறியுள்ள ஆலோசனையானது பெண்ணினத்திற்கே பெரும் கேவலத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவனுக்கே அந்த பெண்ணை திரு மணம் செய்து தர வேண்டும் என்ற மிக மட்டமான கருத்தை தான் வன்மையாக கண் டிப்பதாகவும் ஜசெக வின் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு நேற்று கூறினார். இம்மாதிரியான சம்ப வங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நிகழ்கின்றன என்பதை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும். பல வேளைகளில் திருமணமான பெண்கள் கூட இம்மாதிரியான வன்செயலுக்கு ஆளாகின்றனர். அந்த திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த வனுக்கே திருமணம் செய்து தர முடியுமா என்று காமாட்சி வினவினார். பாலியல் பலாத் காரத்திற்கு ஆளாகும் சிறுமியை அந்த ஆட வனுக்கே திருமணம் செய்து தர முடியுமா? இப்படிச் செய்வதால் நாட்டில் இம்மாதிரி யான சம் பவங்கள் அதிகரிக்காதா? பாலி யல் பலாத்காரம் கடுமையான குற்றம். அதற்கான தண்டனையை கடுமை யாக்க வேண்டுமே தவிர சம் பந்தப்பட்டவரையே மாப்பிள்ளையாக்கி விழா காணச் சொல்வது முட்டாள்தனமான செயல் இல்லையா என்றும் அவர் சாடினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img