செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

கருணாநிதியை பூட்டிவைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின்: மதுசூதனன் நேர்காணல்
வியாழன் 06 ஏப்ரல் 2017 16:44:10

img

தமிழகம் முழுவதுமே வெப்பம் வாட்டினாலும் ஆர்.கே.நகரில் தேர்தல் வெப்பமும் சேர்ந்து கொண்டு அனல் பறக்கிறது. எங்கு பார்த்தாலும் கரை வேட்டிக்ளும் பிரச்சார வேன்களும் தான். அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனன் 'தி இந்து' (தமிழ்) இணையதளத்துக்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார். ஆர்.கே;நகர் இடைத்தேர்தல், சசிகலா குடும்பத்தினர் கட்சியின் மீது செலுத்தும் ஆதிக்கம், ஓ.பன்னீர்செல்வத்தின் நிர்வாகத் திறமை, ஸ்டாலினின் அர சியல் எனப் பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். ஆர்.கே.நகரில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் எங்கள் அணியே வெற்றி பெறும். எங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க துடிக்கிறார் தினகரன். ஆனால், இந்தத் தேர்தலில் டிடிவி. தினகரன் டெபாசிட் இழப்பது உறுதி. எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?: அ.தி.மு.க- வை எம்.ஜி.ஆர். தொடங்கியதும் 1973-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அ.தி.மு.க. சார்பில் கே.மாயத்தேவரும், தி.மு.க. சார்பில் பொன்.முத்துராமலிங்கமும் போட்டியிட்டனர். திமுகவினர் பணபலத்தையும், அதிகார பலத்தையும் கட்டவிழ்த்துவிட்டனர். கருணாநிதி அவரது முழு பலத்தையும் பயன்படுத்தினார். ஆனால், அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை. அதிமுகவின் மாயத்தேவர் வெற்றி பெற்றார். அன்றைக்கு கருணாநிதி எப்படி பணபலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை மீறியும் செயல்பட்டாரோ அதேபோலவே இன்று தினகரன் செய்லபடுகிறார். அன்றைய காலகட்டத்தில் திமுகவுக்கு டெபாசிட்டாவது கிடைத்தது. ஆனால், இத்தேர்தலில் தினகரன் டெபாசிட் இழப் பது உறுதி. அதன் பின்னர்தான் போயஸ் தோட்டத்திலிருந்தும் அதிமுகவிலிருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பல் விரட்டியடிக் கப்படுவார்கள். அப்படியென்றால் வேதா நிலையத்தை மீட்டெடுப்பீர்களா?: வெகு நிச்சயமாக. வேதா நிலையம் அம்மாவின் தேவாலயம். அந்த இல்லத்தை மீட்டெடுப்போம். அம்மாவின் காரில் அமரும் அறுகதை யாருக்கும் இல்லை. நீங்கள்தானே சசிகலாவின் கரங்களைப் பற்றி பொதுச் செயலாளராக வேண்டும் என வலியுறுத்தினீர்கள்? அப்போது அவர்கள் மன்னார்குடி கும்பலாகத் தெரியவில்லையா? ஆமாம். நான் அதை மறுக்கவில்லை. சசிகலாவை மட்டும்தானே கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர் பொதுச் செய லாளராக ஆன பிறகு ஒட்டுமொத்த மன்னார்குடி கும்பலும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டதே. அன்றைய தினம் நான் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறியதற்கும் காரணம் இருக்கிறது. தம்பிதுரை, செங்கோட்டையன் என பலரும் பொதுச் செயலாளர் பதவியை அடையத் துடித்துக் கொண்டிருந்தனர். பலரும் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், அம்மாவால் இரும்புக் கோட்டைபோல் காக்கப்பட்ட கட்சிக்கு பாதகம் வரக்கூடாது என்றே சசிகலாவை ஆதரித்தேன். இது ஒரு புறம் இருந்தாலும் சசிகலாவை பொதுச் செயலாளராக முன்னிறுத்த எனக்கு வற்புறுத்தல் இருந்தது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கும் பணபலத்துக்குமே மவுசு என்ற நிலை குறித்து உங்கள் கருத்து?:இன்றைய நிலை அப்படியில்லை. சசிகலா என்பவருக்கும் அதிமுகவுக்கும் என்ன தொடர்பு. ஜெயலலிதாவால் எந்த சூழ்நிலையிலும் அரசியலில் அடையாளம் காட்டப்படாதவர் சசிகலா. அதேபோல், தினகரன் உள்ளிட்டோரையும் ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். அம்மாவால் அடையாளம் காட்டப்படாதவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும்? தொகுதிக்குள் பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா?: நிச்சயமாக நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் வீடுவீடாகச் சென்று கதவைத் தட்டி பணம் விநியோகிக்கிறார்கள் என்று உறுதியான தகவல் கிடைத்திருக்கிறது. தினகரன் அணியினர் ஓட்டுக்கு ரூ.4000 வீதம் கொடுத்துவருகின்றனர். போலீஸ் உடையில் சென்று பணப் பட்டுவாடா நடைபெறுகிறது. 4000 ரூபாய் வியாபாரியாகிவிட்டார் தினகரன். மதுசூதனன் அதிமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்தார். அதனால், அவர் நினைத்திருந்தால் இத்தொகுதிக்கு இன்னும் நிறைய செய்திருக்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர்.. ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தேன் என்பது உண்மையே. அதன் அடிப்படையிலேயே தொகுதி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வந்தேன். ஆனால், 1996 தேர்தலின் போதே சசிகலா குடும்பத்தால் ஓரங்கட்டப்பட்டேன். ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர்களையெல்லாம் குறிவைத்து பிரிப்பதையே சசிகலா இலக்காகக் கொண்டிருந்தார். இப்போது நிலைமையே வேறு. இந்தத் தேர்தலில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், தொகுதி மக்கள் பிரச்சினைகளை நிச்சயம் தீர்ப்பேன்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கடன் பிரச்சனை... பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்

சிறிய உணவகம் ஒன்றையும், சிட் பண்ட் தொழிலையும்

மேலும்
img
‘கமலைவிட ரஜினி என்ன செய்திருக்கிறார்’- சீமான் கண்டனம்

இந்தியும் கட்டாயம் என்பது, இந்தியை திணிக்கும்

மேலும்
img
கூட்டணி கட்சிகளை கழட்டி விட அதிமுக முடிவு?

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை

மேலும்
img
இளைஞர்களின் தீவிரவாத சிந்தனை பரவல் குறித்து பிரதமர் மோடி பேச்சு...

நாம் இளைஞர்களிடத்தில் தீவிரவாத சிந்தனை பரவாமல்

மேலும்
img
சட்டப்பேரவை தேர்தல்: பாஜக -வின் அடுத்த அதிரடி திட்டம் ரெடி...

மக்களவை தேர்தலில் பாஜக நடத்திய மிகப்பெரிய

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img