ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

ஆளுங்கட்சியின் பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத காளையாய் சீறிப் பாய்ந்து கொண் டிருக்கிறது.
வியாழன் 06 ஏப்ரல் 2017 16:40:22

img

ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைத்து பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்று தேர்தல் ஆணையத்தை, டாக்டர் ராம தாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத காளையாய் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையமோ பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சுமார் 2Ñ லட்சம் வாக்காளர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.100 கோடி பணம் வினியோகிக்கப்பட்டு விட்டது. இடைத்தேர்தல் களம் பணத்தால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு அதிகாரிகளை மாற்றுவதன் மூலமும், சுற்றுக்காவல் குழுக் களை அமைப்பதன் மூலமும் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது? குதிரைகள் தப்பி ஓடிவிட்ட பின்னர் லாயத்தை எத்தனை பூட்டுகள் போட்டு பூட்டி னாலும் அதனால் எந்த பலனும், நன்மையும் ஏற்படாது என்பதைப் போலவே, இப்போது ஆணையம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளாலும் பயன் கிடைக்கப்போவதில்லை. இத்தகைய சூழலில் இடைத்தேர்தலை ஒத்திவைப்பதும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும் அவர்களின் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்வது மட்டும் தான் ஒரே தீர்வாக இருக்கும். தொகுதி மக்களுக்கும் ஆளுங்கட்சி வேட்பாளர் தினகரன் தரப்பினர் ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் கொடுக் கும் காணொக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தினகரன் மீது நடவடிக்கை எடுக்கவும், தேர்தலை ஒத்திவைக்கவும் ஆணையம் தயங்குவது ஏன்? இன்னும் எத்தகைய ஆதாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆணையம் காத்திருக்கிறது? என்பதை விளக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அணி, தி.மு.க. உள்ளிட்ட வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கின்றனர். கொடுக்கப்படும் தொகை, கொடுக் கப்படும் நாள் ஆகியவற்றில் தான் ஆளுங்கட்சி, தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் ஆகியவற்றுக்கிடையே வித்தியாசம் இருக்குமே தவிர, மற்றபடி இந்த 3 தரப்புமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இனியும் தாமதிக்காமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்திவைத்து, பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் வாக் குகளை விலைக்கு வாங்குவதை தடுக்கத் தேவையான தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img