வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

'குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’
வியாழன் 06 ஏப்ரல் 2017 16:32:02

img

மதுபானக் கடைகளின் இழப்பை ஈடுசெய்வதற்காக, நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு எதிராக இன்று அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறது பா.ம.க. இன்று மதியம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் பா.ம.க பாலு. 'குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத்தான் மாநில அரசு விரும்புகிறது' என வேதனை தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டுவதற்காக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றிவிட்டு, டாஸ்மாக் கடை களை தக்க வைத்துக் கொள்ளும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக குரல் கொடுத்து வருகிறது. இன்று காலை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசினார் பா.ம.க செய்தித் தொடர்பாளர் பாலு.அவர்களிடம் மருத்துவர் ராமதாஸ் கொடுத்த கடிதத்தையும் அளித்தார். இதன்பின்னர், நடிகர் கமல்ஹாசனை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தார் பாலு. "எங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்டச் சாலைகளாக மாற்றுவது குறித்து, அவருடைய கருத்தையும் எங்களிடம் தெரிவித்தார். அவர் பேசும்போது, 'வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான் என்பது முதுமொழி. இங்கு குடி உயர்வதைத்தான் கோன் (அரசு) விரும்புகிறது. சாமானிய மக் கள் குடித்தே, தங்களை அழித்துக் கொள்கிறார்கள். அரசுக்கு வருமானம் பிரதானமாக இருக்கிறது. தனிநபர்களின் உடல்நலம்தான் பாதிக்கப்படுகிறது' என வேதனை தெரிவித்தார். மதுவுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிகளை வரவேற்பதாகவும் கூறினார்" என்றார் பாலு. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அக்கறையுள்ள திரைக்கலைஞர்களை சந்திப்பது என பா.ம.க நிர்வாகிகள் வலம் வருகின்றனர். 'அரசின் முயற்சி களைத் தடுத்து நிறுத்தும் வரையில் நாங்கள் ஓயப் போவதில்லை' என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்

மக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்

மேலும்
img
3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-

'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை

மேலும்
img
தமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு! குழப்பத்தில் தொண்டர்கள்!

120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும்
img
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..?

யோகிக்கு எதிராக கண்டனங்கள்

மேலும்
img
புல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்

உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img