திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

பெண்களின் ஒப்புதலுடன்தான் அந்தரங்கம்!
வியாழன் 06 ஏப்ரல் 2017 16:06:41

img

விமானப் பணிப் பெண்களுக்கான நேரடிப் பேட்டியின் போது, அப்பெண்களை இடுப்புக்கு மேல் தங்கள் உள்ளாடையுடன் நிற்க வைத்து சோதனை செய் யப்பட்டதாக கூறப்படும் பரபரப்பான தகவலை தொடர்ந்து, மலிண்டோ ஏர் அதன் பணியமர்த்த நேர்காணல் முறைகளை தற்காத்து அறிக்கை வெளியிட் டுள்ளது. உடலில் வெளியே தெரியக்கூடிய, பச்சைக் குத்தியது போன்ற அடையாளங்களுக்காக அப்பெண்கள் சோதனை செய்யப்படுவர். எனினும், அது தனிப்பட்ட அறையில் அந்தரங்கமாக நடத்தப்படும் ஒன்று. அதிலும், பெண் மேற்பார்வையாளர்கள் தொழில் நிபுணத்துவ முறைப்படி அதனை மேற்கொள்வர் என்று மலிண்டோ அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நேர்காணலுக்கு வரும் பெண்களுக்கு இந்த முறைகள் பற்றி முன் கூட்டியே விளக்கம் அளிக்கப்படுவதுடன், அவர்களின் ஒப்புதலும் பெறப்படும் என்றும் அது தெரிவித்தது.விமானப் பணிப்பெண் பொறுப்புக்கான நேர்காணலுக்கு வரும் பெண்களை தங்கள் மேலாடையைக் கலையச் சொல்லி சோதனை செய் ததுடன், தங்கள் பாவாடையை தூக்கிக் காட்டும்படியும், கால்சட்டையை மேலே உயர்த்திக் காட்டும்படியும் அல்லது தாங்கள் அணிந்திருக்கும் நைலோன் காலுறைகளை கழற்றச் சொல்லியும் பணிக்கப்பட்டிருக்கின்றனர் என தெ மலாய் மெயில் நாளேட்டில் நேற்று வெளியான பரபரப்பான செய்தி குறித்து கருத்துரைத்து மலிண்டோ அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இணையத்தள பயனர்கள் மலிண்டோவின் இச்செயலை கண்டித்துள்ளனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சி பெண் உறுப்பினர்கள் இம்மாதிரியான நேர்காண லுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி வலியுறுத்தியது மட்டுமின்றி, மலேசிய பெண்களிடம் மலிண்டோ மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரி யுள்ளனர். எனினும், இதுதான் தாங்கள் கையாண்டு வரும் நேர்காணல் முறை என்றும், கடந்த 2013-ஆம் ஆண்டு மலிண்டோ தோற்றுவிக்கப்பட்டது முதல் இந்த முறைதான் கடைபிடிக் கப்பட்டு வந்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 4 ஆண்டுகளாக நாங்கள் இதனை கடைபிடித்து வருகிறோம். இதுவரை 700-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களை வேலைக்கமர்த்தியிருக்கிறோம் என்று மலிண்டோ மேலும் கூறியது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img