14 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலனிலிருந்து 2 கிலோ கிராம் எரிவாயுவை காலி தோம்புகளுக்கு மாற்றும் ஏமாற்று வேலையை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். தற்போது 14 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலன்களை நாம் வெ.26.60 காசு கொடுத்து வாங்குகிறோம். அதில் இரண்டு கிலோ கிராம் எரிவாயு குறைந்திருப்பதை நம்மால் அறிய முடியாது. பொதுமக்களின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி எரிவாயு கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இங்குள்ள புக்கிட் இண்டா தொழிற்சாலை பகுதியில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உள்நாட்டு வர்த்தக கூட்டுறவுக்கழக பயனீட்டாளர் நலத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இச்சோதனையில் வெ.121,690 மதிப்புடையை 1,083 எரிவாயு கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அத்துறையின் இயக்குநர் டத்தோ ரொஸ்லான் மயாஹுடின் தெரிவித்தார்.
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்