சிரம்பான் நகரில் உள்ள பெரிய மார்க்கெட்டில் வெடிகுண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அது எப்போது, யாரால் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சிரம்பானிலிருந்து திமியாங் செல்லும் வழியில் சிரம்பான் சந்தை கட்டடத்தின் குப்பைக் கொட்டும் பகுதி யில் இந்த வெடிகுண்டை பொது மக்கள் கண்டனர். இந்நிலையில் அந்த வெடிகுண்டு அங்கு எப்படி வந்தது? யார் அதனை கொண்டு வந்தனர் என்பது தெரியாத நிலையில், அதனை குறித்து சிரம்பான் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கிகளும் முக்கிய வர்த்தகத் தளங்களும் அமைந்திருக்கும் இவ்விடத்தை பொது மக் களின் பாதுகாப்பு கருதி பயன்பாட்டிற்கு தற்காலிகமாக நேற்று மூடப்பட்டது.
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்