புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மீசை, கணேஷ் சுட்டுக்கொலை!
வியாழன் 06 ஏப்ரல் 2017 13:11:59

img

பேரா, பினாங்கு, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் ஆகியவற்றின் கடுங்குற்றப்பிரிவின் போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில் இரண்டு இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் தஞ்சோங் ரம்புத்தான் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று சென்றது. அந்த காரை பின் தொடர்ந்து போலீசார் சென்றனர். போலீஸ் பின் தொடர்வதை அறிந்த அவர்கள் தப்பித்துச் செல்ல சிம்மோர் செல்லும் தானா ஈத்தாம் சாலையில் வேகமாக காரை செலுத்தியிருக்கின் றனர். அவர்களை விரட்டிக் கொண்டு போலீசார் சென்ற போது இரு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது போலீசார் மேற் கொண்ட அதிரடி தாக்குதலில் அந்த இரண்டு இந்திய நபர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பேரா இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அஸ் னான் ஹசான் இங்கு கூறினார். சுமார் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட வயது கொண்ட இவர்கள் பிரபல மாமாக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந் தேகிக் கப்படுகிறது. இவர்களிடத்தில் அடையாள அட்டை எதுவும் இல்லை என்று கூறினார். இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களுக்காக போலீசாரால் தேடப் பட்டு வந்தவர்கள் என்றும் ஒருவர் ‘மீசை’ என்றும் மற்றொருவர் ‘கணேஷ்’ என்ற அழைப்பு பெயர்களைக் கொண்டவர்கள் என்று கூறினார். பினாங்கு, பேரா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் பல கொள்ளைச் சம்பவங்களிலும் பொது மக்களை வெட்டி காணப்படுத்தியும் வந்த இவர் களின் கொட்டத்தை அடக்க புக்கிட் அமான் கடும் குற்றப்பிரிவு தனிப்பிரிவு ஒன்றை அமைத்து இதில் பேரா, பினாங்கு கடும் குற்றப் பிரிவை இணைத்து கூட்டாக அதிரடி வேட்டையை நடத்த திட்டமிட்டது. இந்த அதிரடி வேட்டையில் திருட்டுக் காரை பயன்படுத்திய இவர்கள் சிக்கினர். இவர்களை தடுத்து நிறுத்துவதில் போலீசார் தோல்வி கண்டனர். ஒரு கட் டத்தில் கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தபோது அதிலிருந்து வெளிப்பட்ட கொள்ளையன் ஒருவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். மற்றொ ருவன் பாராங்கத்தியைக் கொண்டு தாக்க முற்பட்டான். போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ள கொள்ளையர்களை நோக்கி சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து புள்ளி 38 ரக ரிவால்வர், தோட்டாக்கள், பாராங்கத்தி, கோடரி, போலீசார் பயன்படுத்தும் மேல் சட்டை, தொப்பி இவற்றை போலீசார் கைப்பற்றினர் என்று சிறப்பு செய் தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கூறினார். நாட்டில் சுமார் 20 ஆண்டு காலமாக கேங் மாமாக் கொள்ளைக் கும்பல் செயல்பட்டு வருகிறது என்றும் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் கடந்த ஐந்து ஆண்டு காலமாக கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்.

அத்தொகுதி காலியாக்கப்பட்ட விதம் ஜனநாயகக்

மேலும்
img
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஓராண்டு லெவி கட்டணம் வெ.10,000.

அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதி ஆதாயங்களில்

மேலும்
img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img