வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

நீங்கள் பெல்ட் அணியும் பெண்ணா?
புதன் 05 ஏப்ரல் 2017 13:34:57

img

கார் பயணம் , கராத்தே, ராணுவம் என எல்லா இடங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பெல்ட் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா? அவர்கள் மட்டும்தான் அணிய வேண்டுமா? ‘‘நோ...’’ என்கிறார்கள் ஃபேஷன் டிசைனர்கள். “ஆண்களோட உடல்ல நெளிவு சுளிவு கிடையாது. ஆனா, பெண்கள் அப்படியில்ல. அடிப்படைலயே இவங்களோட உடல்வாகு நெளிவு சுளிவோட இருக் கும். அகன்ற பின்பக்கம் இவங்க ஸ்பெஷல். அதனால பாவாடை, பேன்ட்ஸ்ஸோ உறுதியாக்க நிக்கும். ஆகவே, பெல்ட் அணியும் தேவை பெண்களுக்கு இல்லை. ஆனா, எந்த ஓர் உடையையும் அழகா மாற்றும் வித்தை பெல்ட்டுக்கு உண்டு. இதனாலதான் இப்ப ஃபேஷன் உலகத்துல பெண்களுக்கான ஸ்பெஷல் பெல்ட்டும் வந்திருக்கு..! ஆண்களோ பெண்களோ எல்லாருக்குமே உடலின் கீழ்ப் பகுதியை விட மேல் பகுதி வெயிட்டா இருக்கும். குறிப்பா பெண்களுக்கு. இயற்கையே இது மாதிரி அமைச்சிருக்கறதால நாம பெல்ட் அணியறப்ப அந்த வெயிட்டை அது தாங்கி நிற்கும். அதனாலதான் பெல்ட் அணியற பெண்களுக்கு பெரும்பாலும் முதுகுவலி வர்றதில்லை. இதை எல்லாம் மனசுல வைச்சுதான் அந்தக் காலத்துல நம்ம முன்னோர்கள் இடுப்புல நூல் கயிறு கட்டச் சொன்னாங்க. இதனோட நவீன எக்ஸ்டென்ஷன்தான் பெல்ட்...’’ என்கிறார்கள் ஃபேஷன் டிசைனர்கள். வளையல், தோடு மாதிரியானதெல்லாம் உடைகளை மேலும் அழகுபடுத்தக் கூடிய விஷயங்கள். பெல்ட்டும் அப்படித் தான். சொல்லப்போனா மாடர்ன் உடைகளுக்கு ஏற்றது பெல்ட்தான். எந்த அளவுக்கு பெல்ட்டை ரிச் ஆக காட்டுறோமோ அந்த அளவுக்கு ஃபேஷன் தூக்கும். உடைக்கு கிடைக்கும் லுக்கை விட பெல்ட் அணிந்த பிறகு தூக்கலான ஒர்ரு லுக் கிடைக்கும். இதுதான் பெல்ட்டோட சீக்ரெட். உண்மையை சொல்ல ணும்னா எல்லா காலத்துலயும் பெண்களுக்கு பெல்ட் இருந்துட்டுதான் இருக்கு. இப்ப ஒட்டியாணத்தை எடுத்துப்போம். நம்ம உடம்போட வளைவுகளை சேலையோட முந்தியும் மடிப்புகளும் மறைச்சுடும். அதுவே ஒட்டியாணம் அணியறப்ப நம்ம உடலோட வளைவை அது எடுத்துக் காட்டும். இப்பவும் திருமணங்கள்ல ஒட்டியாணம் ஸ்பெஷலா இருக்கக் காரணம் இதுதான். இப்போது வரும் ஜீன்ஸ் எல்லாமே குறைவான வெயிஸ்ட் ரகம். கீழே குனிந்தாலும் நிமிர்ந்தாலும் சட்டுனு இறங்கிடும். உள்ளாடை தெரியவும் வாய்ப் பிருக்கு. பெல்ட் அணிந்தா இந்த தர்மசங்கடத்தை தவிர்க்கலாம். லோ ஹிப், க்ராப் டாப் பேன்ட்ஸ் அணியறப்பவும் கையோட பெல்ட் மாட்டறது நல்லது. முக்கியமான விஷயம், பெல்ட் வெறும் பாதுகாப்புக்கு மட்டுமில்ல. அது ஃபேஷனுக்கும்தான். கமான் கேர்ள்ஸ்... பெல்ட் அணிங்க!

பின்செல்

மகளிர்

img
நெகிரி இந்து சங்க மகளிருக்கு சிகை அலங்கார, முக ஒப்பனைப் பயிற்சி

குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்

மேலும்
img
வியாபாரத்தில் சாதிக்கத் துடிக்கும் மலேசியப் பெண்கள் வரிசையில் விநோதினி!

அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்

மேலும்
img
தடைகளைத் தகர்த்தெறிந்தார்

தனக்கென்று ஒரு தடம் அமைத்தார்

மேலும்
img
நீங்கள் பெல்ட் அணியும் பெண்ணா?

கார் பயணம் , கராத்தே, ராணுவம் என எல்லா இடங்களிலும்

மேலும்
img
ஆண்மைக்குறைவு ... குழந்தையின்மை -Part -2

ஒரு டெஸ்ட் டியூபில் பெண்களின் கருமுட்டைகளில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img