வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

சர்ச்சைக்குரிய மசோதா!
புதன் 05 ஏப்ரல் 2017 12:18:07

img

பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் பரிந்துரை செய்திருந்த 355 சட்டத் திருத்த மசோதா வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அது மீண்டும் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வியாழக்கிழமை இறுதிநாளாக நடைபெறும் மக்களவைக் கூட்டத்தின்போது இச்சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். ஆனால், அது தொடர்பான எந்தவித விவாதமும் நடைபெறாது. மாறாக, அது மீண்டும் ஒத்திவைக்கப்படும் என்று அம்னோவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு வர் கூறினார். இதுகுறித்து துணைப் பிரதமரும் தேசிய முன்னணி துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று அனைத்து நாடா ளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் அம்னோ, மசீச, மஇகா உட்பட தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டுள் ளனர். வரும் ஏப்ரல் 6ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் 1965-ஆம் ஆண்டு ஷாரியா நீதிமன்ற சட்ட திருத்த மசோதா (355 சட்ட திருத்த மசோதா) மீதான விவாதம் ஏதும் நடைபெறாது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை துணைப் பிரதமர் கூறியிருந்தார். இந்த சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு மசீச எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, துணைப் பிரதமர் யாரையும் கருத்து கேட்கவில்லை. மாறாக, அதுகுறித்து விளக்கம் மட்டுமே அளித்தார் என்றார். எனினும், வியாழக்கிழமை மக்கள வையில் இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுமா, இல்லையா என்பதை மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிக்கார் அமின் மூலியாவே முடிவு செய்வார் என்றார். நாளை வியாழக்கிழமைதான் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளாகும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img