வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் பதிவு ரத்து?
புதன் 05 ஏப்ரல் 2017 12:07:03

img

மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் 86 ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக ஆலயத் தலைவர் பி.ராமன் கூறினார். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவர். பக்தர்கள் கார்களிலும் பேருந்து களிலும் வருவதற்கும் பேருந்துகளை நிறுத்துவதற்கும் ஆலயநிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருப்பதாக அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் ஆலய நிர்வாகம் மாரான் மரத்தாண்டவர் ஆலய வளர்ச்சிக்காக பல திட்டங்களை மேற்கொண்டு செம்மையாக முடித்திருக் கிறது. பிரதமர் வழங்கிய மானியத்தைக் கொண்டு மண்டபம், உணவு மண்டபம் கழிப்பறைகள் ஆகியவற்றை கட்டி முடித்திருக்கிறோம். ஆலயத் தின் அருகிலேயே கார், பேருந்து நிறுத்துவதற்கு நிலமும் வாங்கியிருக்கிறோம். இந்த நிலங்கள் ஆலயத்தின் சொத்துக்களாகும். ஆலயத்தின் மீது சிலர் அவதூறு கூறுவதை நிறுத்தி விட்டு ஆலய வளர்ச்சிக்கு ஆலய நிர்வாகத்தோடு ஒத்துழைப்பை தர வேண்டும். மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆலயத் தில் எந்த தவறுகளும் நடைபெறவில்லை. உள்துறை அமைச்சின் ஆலய நிர்வாகம் தொடர்ந்து செயல் பட அனுமதி வழங்கியிருப்பதாக நேற்று மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர திருவிழா பற்றி பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது அவர் கூறினார். இவ்வாண்டு 4 ஆயிரம் பக்தர்கள் புனித நடைப்பயணம் மேற்கொண்டு மாரானுக்கு வருகின்றனர். அதே வேளை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 8 ஆம் தேதி சனிக்கிழமையும் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் மரத்தாண்டவர் ஆலயத்தில் ஒன்று கூடுவர் என அவர் கூறினார். 8 ஆம் தேதி இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாரானுக்கு வரும் பக்தர்கள் மாரான் வழியாகவும் ஜெங்கா வழியாக வும் ஆலயத்திற்கு வரலாம். இரண்டு வழிகளிலும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவடி எடுக்கும் பக்தர்கள் சமய சம்பிரதாயப்படி எடுக்க வேண்டும். அலகு காவடிகள் 3 அடிக்கு மேல் இருக்க கூடாது. அரிவாள், கத்திமேல் நடப்பது சுருட்டு புகைப்பது ஆகியவை தடை செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் மரத்தாண்டவர் விழா தொடங்கி ஒவ்வொரு நாளும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இப்பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதாக அவர் கூறினார். பங்குனி உத்திரத்தன்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் முன்னாள் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ பழனிவேலு ஆகியோர் சிறப்பு வருகை புரிவர். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆலயத்தலைவர் ராமனுடன் பொருளாளர் டத்தோ தமிழ்ச்செல்வம், உமாராணி உணவக உரிமையாளர் டத்தோ ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img