புதன் 14, நவம்பர் 2018  
img
img

வெ.203 மில்லியனை இழந்தது இ.பி.எப்!
செவ்வாய் 04 ஏப்ரல் 2017 13:43:58

img

தன் வசமிருந்த பெல்டா குளோபல் வென்ட்சர்ஸ் (எப்ஜிவி) பங்குகளை கடந்த ஆகஸ்டில் விற்றதில் ஊழியர் சேமநிதி வாரியத்திற்கு (இபிஎப்) வெ. 203.18 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. நேற்று திங்கட்கிழமை நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்து வடிவ பதிலில் இது குறிப்பிடப் பட்டிருந்தது. இபிஎப் எந்தெந்த நிறுவனங்களில் நிதி நிலை தொடர்ந்து சரிந்து வருகிறதோ, நிர்வாகத்தில் குறைபாடு காணப்படுகிறதோ அந்த நிறுவனங்களில் வைத் துள்ள பங்குகளை குறைத்துக் கொள்ளும் அல்லது முற்றாக விற்று விடும் என்று அமைச்சு அவ்வாரியத்தின் முதலீட்டு வியூகத்தை விளக்கியது. இந்த 20 கோடி வெள்ளி இழப்பு என்பது பெரிய தொகையாகும். தொடக்கத்தில் இபிஎப், எப்ஜிவி-இல் 4.5 விழுக்காடு பங்கு வைத்திருந்தது. பின்னர் அது 2013-இல் 8.49 விழுக்காடாக உயர்ந்தது. எப்ஜிவி 2012-இல் கோலாலம்பூர் பங்குச் சந்தையில் முதன்முதலாக அதன் பங்குகளை வெளியிட்டபோது (ஐபிஓ) அதன் மூலமாக வெ.10 பில் லியன் மூல தனத்தைத் திரட்டியது.அந்த ஆண்டில் உலகிலேயே ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அடுத்தப் படியாக மிகப் பெரிய ஐபிஓ-வாக அது கருதப்பட்டது. அந்நிறுவனத்தின் ஒரு பங்கு வெ.4.55 ஆகக் கைமாறியது. ஆனால்,அதன் பின்னர் பங்குவிலை தொடர்ந்து இறங்குமுகமானது. 2015-இல் அது வெ.1.19 என ஆகக் குறைந்த நிலைக்கு இறக்கம் கண்டது. இதைப் பதிவிடும் நேரம் எப்ஜிபி பங்குகளில் பரிவர்த்தனை வெ.2.09 ஆக இருந்தது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img