வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

இந்திய விசா கட்டண உயர்வு ரத்து!
செவ்வாய் 04 ஏப்ரல் 2017 13:32:32

img

இந்திய விசா கட்ட ணம் 150 விழுக்காடு அதிரடியாக உயர்த்தப் பட்டதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான கண்டனம் எழுந்ததை தொடர்ந்து 457 வெள்ளி புதிய கட்டண அமலாக்கத்தை அடுத்த 48 மணிநேரத்தில் இந்தியத் தூதரகம் மீட்டுக் கொண்டது. 189 வெள்ளி பழைய கட்டணமே தொடர்ந்து அமலில் இருக்கும் என்று நேற்று அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு செல்லும் மலேசியர்களுக்கான விசா கட்டணம் 150 சதவீதம் அதாவது வெ. 457 ஆக உயர்த்தப்படும் என்று இந்தியத் தூதரகம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.விசா கட்டணம் வெ. 189 லிருந்து வெ. 450 ஆக உயர்த்தப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்து பத்தி ரிகைகளில் பூதாகரமாக வெடித்தன.இக்கட்டண உயர்வால் இந்தியாவுக்கு செல்லும் மக்களின் நிலை என்னவாகும் என்று பலர் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் இருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கு இலவசமாக விசா வழங்கப்படும் என்று மலேசிய அரசு அறிவிக்கும் பட்சத்தில் மலேசியர்களுக்கு மட்டும் விசா கட்டணத்தை 150 சதவீதம் உயர்த்துவது எந்த விதத்தில் நியாயமாகும் என்று மக்களிடையே கடும் கண்டனம் எழுந்தது.சனி, ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகளை தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை மக்கள் விசா எடுப்பதற்காக தலைநகரில் உள்ள இந்திய விசா மையத்திற்கு சென்றனர். விசா கட்டணம் 450 வெள்ளியாக உயர்த்தப்பட்ட விவகாரம் குறித்து அவர்கள் அனைவரும் கேள்வி எழுப்பியதுடன் அதிருப்தியுடன் விசாவிற்கு விண் ணப்பித்து சென்றனர்.நேற்று காலையில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் 450 வெள்ளி செலுத்தி விசாவிற்கு விண்ணப்பம் செய்திருந்த வேளையில் சரியாக நண்பகல் 12.15 மணிக்கு பழைய கட்டணத்திலேயே விசா வழங்கப்படும் என்று அம்மையத்தின் அதிகாரிகள் அறிவித்தனர். உடனே அங்குள்ள மக்கள் கைத்தட்டி மகிழ்ச்சியில் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து இந்திய விசா மையத்தின் மலேசிய தலைவர் கே. தங்கவேலு செய்தியாளர்களிடம் பேசினார்.இந்திய விசா கட்டணம் 150 சதவீதம் உயர்த்தப்பட்டது குறித்து மக்களிடையே இருந்து கடுமையாக கண்டனக் குரல்களை நாங்கள் பெற்றோம்.காலையில் இருந்து மக்கள் இங்கு விசாவிற்கு விண்ணப்பம் செய்து கொண்டு இருந்தனர். விசாவின் புதிய கட்டணத்தை நாங்கள் கூறியதும் அவர்கள் அதிருப்தியுடன் பணத்தை செலுத்தினர். திடீரென இந்தியத் தூதரகத்தில் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. விசா கட்டணத்தை உயர்த்த வேண்டாம். 6 மாத விசாவிற்கு முந் தைய கட்டணமாக வெ. 189 மட்டுமே வசூல் செய்தால் போதும் என்று இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் எங்களிடம் கூறினர்.இதனைத் தொடர்ந்து இந் திய விசா கட்டணம் வெ. 189 மட்டுமே விதிக்கப்பட்டது. காலையில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் 450 வெள்ளியை செலுத்தி விசாவிற்கு விண்ணப்பம் செய்தனர். இவர்களுக்கான பணம் திருப்பி தரப்படும் அல்லது அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான விசா வழங்கப்படும். இது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஆக மொத்தத்தில் இந்திய விசா கட்டணம் 189 வெள்ளி மட்டுமே. இதில் எந்த மாற்றமும் இருக்காது. மக்களும் குழப்பம் அடைய வேண்டாம் என்று தங் கவேலு கூறினார்.ராம நவமியை முன்னிட்டு இன்று இந்திய விசா மையம் செயல்படாது. நாளை முதல் மக்கள் தங்களின் விசாவிற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img