திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

மழலைகளின் எதிர்காலம் கேள்விக் குறியா?
திங்கள் 03 ஏப்ரல் 2017 18:02:20

img

மலேசியாவில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலான இன்னல்களை ஏற்படுத்தி வருவதற்கு வானத்திலிருந்து யாருமே குதிக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்த சமுதாயமாகவே நாம் இருந்து வருவதாக ஏவுகணை கருதுகின்றது.பேரறிஞர் அண்ணா ஒரு முறை மேடையில் பேசும்போது உலகத்திலேயே இந்தியர்களுக்கு எதிரியாக யாருமே வரப் போவதில்லை மற்றொரு இந்தி யனைத் தவிர என்று கூறிய வார்த் தையில் 100% உண்மை இருப்பதாகவே ஏவுகணை இங்கு நடக்கும் சம்பவங்களை வைத்து எடை போடுகின்றது. * 39 தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானத்திற்குத் தடையாக இருப்பவர்கள் யார்? * லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வில்லங்கத்தை ஏற்படுத்துவது யார்? * செரண்டா தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டுமானத்தை தடுத்து நிறுத்தியிருப்பது யார்? * ஹிண்ட்ராப் தேசிய முன்னணியின் ஐந்தாண்டு செயல் வரைவுத் திட்டத்தினைத் தடுத்தது யார்? * இடம் பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கு குழி பறித்தது யார்? போன்ற கேள்விகளுக்கு விடையைத் தேடிப்பாருங்கள் நம்முடைய அவலமான நிலை தெளிவாகப் புரியும் என ஏவுகணை எதிர்பார்க்கின்றது. மழலையர் பள்ளிகள்: பாலர் பள்ளி எனப்படும் மழலையர் பள்ளிகளின் தொடர்பில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் 18.12.1991 இல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 27.1.1992இல் கல்வியமைச்சுடனான சந்திப்பிற்குப் பின்னர் பரிட்சார்த்த முறையில் 1131 பள்ளிகளில் பாலர் பள்ளிகளை இயக்கும் திட்டம் உருவானது. 1996 ஆம் ஆண்டு கல்வி சட்டத்தின் (Akta Pendidikan 1996) வழி மழலையர் பள்ளிகள் கல்வியமைச்சின் தேசிய திட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. 6.6.2001 ஆம் ஆண்டு நாள் முதல் அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் நடவடிக்கை விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது நாடு தழுவிய கல்வியமைச்சிற்கு உட்படுத்தப்பட்ட 6120 ஆரம்பப்பள்ளிகளில் (தேசியப் பள்ளிகள்/ சமயப்பள்ளிகள்/ தமிழ்ப்பள்ளிகள்/ சீனப் பள்ளிகள்) 9321 பாலர் வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் காண்பதற்கு வேதனையே மிஞ்சுகின்றது. மலேசியக் கல்வியமைச்சு தேசியப்பள்ளிகளில் மழலையர் பள்ளிகளை அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளை முழுமையாகக் கைவிட்டு விட்டதாகவே கருத வேண்டியுள்ளது. தேசியப்பள்ளிகளில் செயல்படும் ஒரு மழலையர் பள்ளி யைக் கூட அரசியல் கட்சிகளான அம்னோவோ கெராக்கானோ கட்டவில்லை ஆனால் தமிழ்ப்பள்ளிகளில் மழலையர் பள்ளிகளைக் கட்டும் நடவடிக் கையை மட்டும் ஏன் ம.இ.கா.விடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஏவுகணையின் கேள்வியாகும். ஏன் தடம் மாறியது? :மலேசியாவில் செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டினை உறுதி செய்வதற்கும் சரியான தடத்தில் தேசிய கல்வி நீரோட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் விடுபட்டு விடாமல் இருப்பதற்கும், தேசிய முன்னணியின் தலைமைத்துவத்தில் மலேசிய இந்தியர்கள் கல்வி உரி மைக்கு அஸ்திவாரம் அமைத்திருக்கும் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் பிரதமரின் நேரடியான அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்ட வரைவினை (Pelan Tindakan Masa Depan Sekolah Tamil -PTST) பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளியில் தொடக்கி வைத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், பிரதமர் துறையின் கீழ் தனி நிர்வாகப் பிரிவையும் (DTST Jabatan Perdana Menteri) அமைத்து அதன் இயக்குநராக பேராசிரியர் முனைவர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரனை நியமித்திருந்த பட்சத்தில் இரண்டு ஆண்டுகால ஆய்வுக ளுக்குப் பின்னர் ‘செயல்வரைவு’ திட்டத்தினை முழுமைப்படுத்தி பிரதமரிடமும் சமர்ப்பிக்கப்பட் டிருப்பதை ஏவுகணை முழுமை யாக அறிந்துள்ளது. மலேசியப் பிரதமரின் நேரடியான வேண்டுகோளுக்கு இண ங்கி தயாரிக்கப்பட்ட தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை நேரடியாகவே பி.டி.எஸ்.டி செயல்படுத்த விடா மல் மஇகாவிடம் மழலையர் பள்ளிகளை நிர்மாணிக்கும் பொறு ப்பினைக் கொடுத் திருப்பது விவேகமான நட வடிக்கையாக ஏவுகணை கருதவில்லை. மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துமா?: ஏவுகணையைப் பொறுத்தமட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம் பாட்டு நடவடிக் கைகளை மஇகா முழு மையாக கைவிட்டுள்ள தாகவே அறிய வேண்டியுள் ளது. 2012ஆம் ஆண்டில் பிரத மர் நேரடியாகவே பி.டி. எஸ். டியிடம் வழங்கிய வெ.20 மில்லியன் தொகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முழுமை பெற்றிருக்கும் நிலையில் மஇகாவின் 39 தமிழ்ப்பள்ளிகளுக் கான கட்டுமானம் தேசிய முன்னணிக்கு மிகப் பெரிய பின்னடை வினை ஏற் படுத்தியுள் ளதைப் பிரத மர் டத் தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவாரா? இதற்கிடையே 2017 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய 50 மழலையர் பள்ளிகளுக்கான கட் டுமானத்தை ஆண்டு இறுதியி லேயே தொடக்கப் படுவதாக மஇகா அறிவித்திருக்கும் அறி விப்பு மலேசிய இந்தியர்க ளிடையே மிகப் பெரிய அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளதை ஏவுக ணையால் நிரூபிக்க முடியும். 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 168 தமிழ்ப்பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் 50 பள்ளிகளுக்கான மானியம் வெ.10 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதைப் பற்றிய கவலை யாருக்குமே இல்லை. அதைவிட மோசமாக மஇகா வின் தலைமையில் இத்திட்டத் தினை மேற்கொள்வது மேலும் மேலும் பிரச்சினை களை உரு வாக்காதா என்பதே இன்றையே கேள்வியாகும். ஏவுகணைக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பின்வரும் செயல்பாடுக ளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற பரிந்துரை முன் வைக்கப் படுகின்றது. * 50 மழலையர் பள்ளிகளுக் கான பட்ஜெட் ஒதுக்கீடு முழு மையாக பி.டி.எஸ்.டி (PTST)க்கு வழங்கப்பட வேண்டும். * 50 மழலையர் பள்ளிகளுக் கான கட்டுமானம் பி.டி. எஸ்.டியால் மேற்கொள்ளப்பட வேண்டும். * 50 மழலையர் பள்ளிகளும் 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் பூர்த்தியாக வேண்டும். ஏற்கெனவே மஇகாவின் தலைமைத்துவத்தின் வழி மலேசியக் கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதனின் மேற்பார்வையில் 39 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானம் பல்வேறு வில்லங்கங்களை எதிர்நோக் கியுள்ள அதே நிலைமை புதிதாக நிர்மாணிக்கப்பட விருக் கும் 50 தமிழ் பாலர் பள்ளிகளுக்கும் நேர்ந்து விடாதோ என்ற அச்சம் ஏவுக ணைக்கு ஏபட்டுள்ளது. மஇகா வின் வழி 50 தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளிகளைக் கட்டும் செயல் திட்டம் வருமா, வராதா.....?

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img