வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

கொலம்பியாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்
திங்கள் 03 ஏப்ரல் 2017 16:35:21

img

கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடை யாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பலரை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இடி பாடுகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் விரைவில் சகஜ நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும், முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஈடுசெய்ய முடியளாத பேரிழப்பு என்பதை தாம் உணர்ந்துள்ளதாகவும், இந்த தாக்கத்திலிருந்து மக்களை மீட்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார். கொலம்பியாவின் ஒரு மாகாணத்தில் கடந்த வியாழனன்று லேசாக துவங்கிய மழை, பின்னர் வலுப்பெற்று கொட்டித் தீர்த்ததால் மொகோவோ உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் பலபகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மொகோவா நகரமும் பெரும் சேத்தை சந்தித்தது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் ப்ளோரன்ஸ் புயலால் வெள்ளம்

இந்நிலையில், பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம்

மேலும்
img
கடந்த 7 ஆண்டுகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற்றம்: ஆய்வில் தகவல்

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று குடியேறும்

மேலும்
img
நடப்பாண்டின் சக்தி வாய்ந்த மங்குட் புயல்

பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்த மங்குட் புயல் தற்போது சீனாவின்

மேலும்
img
சீனா மீது கூடுதல் வரி... அமெரிக்காவின் பொருளாதார போர்

சுமார் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு

மேலும்
img
எதற்காக 200 கோடி டாலர்களை தந்தார் அமேசான் நிறுவனர் 'ஜெஃப் பிஸோஸ்'...?

ஒரு குழந்தை தனது ஆரம்பக்கால பள்ளிபடிப்பை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img