திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

விவசாயிகள் தற்கொலை தேசத்துக்கு தலைகுனிவு
திங்கள் 03 ஏப்ரல் 2017 16:32:12

img

உயிர்களையும் காக்கும் விவசாயிகள் உயிர்வாழ முடியாமல் தற்கொலை செத கொள்வது இந்த நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டு விவசாயம் பொத்துப் போனது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவி வருவதால் 200க் கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை கொண்டுள்ளனர். பயிர் செய வாங்கிய கடைனை கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாயிகளை வங்கி அதி காரிகள் மிரட்டுவதால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செத கொண்டனர். இந்த பிரச்சனைகளில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டில்லியில் கடந்த 21 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களை ஆளும் பாஜக அரசு கண்டகொள்ளாமல் இருப்பது விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனை குறித்து செதியாளர்களிடம் பேசிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், பயிர்கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செது கொள்வது இந்த நாட்டுக்கே மிகப் பெரிய தலைகுனிவு என தெரிவித்தார். இந்த நாட்டுக்கே உணவளித்துவரும் அவர்களை நாம் அனைவரும் ஒன்றினைந்து பாதுகாக்க வேண்டும் என சகாயம் தெரிவித்தார். இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகள் பக்கம் இருக்க வேண்டம் என வலியுறுத்திய சகாயம், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட வேண்டும் என தெரிவித்தார். அறவழியில், சட்டத்திற்குட்பட்டு விவசாயிகளுக்காக இளைஞர்கள் போராடிவருவதில் எந்த தவறும் இல்லை என சகாயம் தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img