img
img

காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற கொடூர காதலன் தூக்கு போட்டு தற்கொலை
சனி 01 ஏப்ரல் 2017 14:01:25

img

சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த இருதயராஜ். மகள் ஜெனிபர்புஷ்பா (20) நுங்கம்பாக்கத்தில் மகளிர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரும் செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த ஜான் மேத்தீசும் (22) காதலித்து வந்தனர். அவரது தந்தை மாணிக்க தாஸ் டெய் லராக உள்ளார். ஜான்மேத்தீசும் அவரது கடையில் வேலை செய்து வந்தார். இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு ஜெனிபர் புஷ்பா எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெனிபர் காதலை முறித்துக் கொள்வோம் என்று ஜான்மேத்தீசிடம் கூறினார். இந்த நிலை யில் நேற்று முன்தினம் ஜெனிபரின் பிறந்தநாள் வந்தது. அப்போது கடைசியாக மாமல்லபுரத்தில் நாம் இருவரும் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று ஜான்மேத்தீஷ் கூறினார். அப்போது உனக்கு நான் பரிசு ஒன்று கொடுக்கிறேன். அதை மட்டும் வாங்கி கொள் என்று மேத்தீஷ் கூறினார். இதனை நம்பி ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவ ரும் புலிக்குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது பரிசு பொருள் இருப்பதாக கூறி அட்டை பெட்டியை மேத்தீஷ் காட்டினார். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெனிபரிடம் வற்புறுத்தினார். ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறி அட்டை பெட் டியை திறந்தார். அதில் இருந்த சுத்தியல் ஒன்றை எடுத்த மேத்தீஷ் திடீரென ஜெனிபர் தலையில் ஓங்கி அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெனிபர் நிலைக்குலைந்தார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பலியானார். பின்னர் காதலியின் துப் பட்டாவை எடுத்து அவரது உடல் அருகே சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இருவரையும் காணாததால் குடும்பத்தினர் தேடினர். நண்பர்கள் கொடுத்த தக வலின் பேரில் மாமல்லபுரம் சென்றனர். அப்போது புலிக்குகை அருகில் மேத்தீஷ் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகே 2 பேரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. மாமல்லபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img