புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

ஜெ.வின் சிகிச்சை தொடர்பாக, பன்னீர்செல்வம் கூறிவரும் கருத்து வேடிக்கை!
சனி 01 ஏப்ரல் 2017 13:30:40

img

'ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் கருத்து வேடிக்கையாக உள்ளது' என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, காட்டமாகக் கூறினார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, பல்வேறு கருத்துகளை ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். சில நாள்களுக்கு முன்பு, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்ல வேண் டும் என்று தம்பிதுரையிடம் கூறியதாகவும், அதை, சசிகலா குடும்பத்தினர் தடுத்ததாகவும் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். சென்னையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளி நாட்டுக்குக் கொண்டு செல்வதை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் தடுத்தார் என்று கூறியிருந்தார். இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஜெயலலி தாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் கருத்து வேடிக்கையாக உள்ளது என்று கூறினார். ஆர்.கே.நகரில் பரிசுப்பொருள்கள் எதையும் தேர்தல் ஆணையம் இதுவரை பிடிக்கவில்லை என்று தெரிவித்த தமிழிசை, பா.ஜ.க வெற்றி பெற்றால்... ஆர்.கே.நகர்த் தொகுதி, பிரதமர் கவனத்தில் இருக்கும் என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img