ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

13வது தேர்தலில் தமிழ்ப்பள்ளிகளுக்கு பிரதமர் ஒதுக்கிய நிதிக்கான திட்டங்கள் இன்னும் ஏன் இழுபறி?
சனி 01 ஏப்ரல் 2017 12:52:52

img

மலேசிய நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தலை முன் வைத்து தமிழ்ப்பள்ளி களின் மேம்பாட்டிற் காக பிரதமரின் நேரடியான சிறப்பு ஒதுக்கீட்டின் வழி (PRK 2012) 39 தமிழ்ப்பள்ளிகளுக்கு விடியலை ஏற்படுத்தும் மேம் பாட்டு நடவடிக்கைகள் பல்வேறு வில் லங்கங்களால் இன்றுவரை நிறைவு பெறாமல் இருப்பதற்கு யார் காரணம்? அந்த காரணத்தை நண்பன் குழு அறிய விரும்புகின்றது. தனித்தனியாக யாரையும் குற்றம் கூறுவதாக கருதப்படும் நிலை யில் 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் இன்றுவரை நிறைவு பெறாமல் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவது தேசிய முன்னணியின் தலைமைத்துவத்திற்கு மாபெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதை இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உணர வில்லையா அல்லது ஏன் பதில் கூற வேண்டும் என்ற எண்ணமா என்பதை நண்பன் குழு அறிய விரும்புகின்றது. வி.கே.இரகு பதில் தர வேண்டும்! மலேசியக் கல்வியமைச்சின் வழி பிரதமர் துறையின் நேரடியான தலையீட்டின் வழி பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் முன்னாள் சிறப்பு ஆலோசகரான டத்தோ ரவீன் பொன்னையாவின் அரிய முயற்சியின் வழி ஏறக்குறைய வெ.236 மில்லியன் தொகையில் முடிவு பெற்றிருக்க வேண்டிய 39 தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் ஜவ்வைப்போல் இழுத்தடிக்கப்படுவதற்கான உண்மையான காரணங்களை மலேசிய இந்தியர்கள் அறிய விரும்புகின்றனர். முதல் முறையாக இந்தியக் குத்தகையாளர்களைக் கொண்டு தமிழ்ப்பள்ளிகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் வேண்டுமென்றே முட்டுக் கட்டைகள் ஏற்படுத்தப்படுகின்றனவா என்பதை அறிய நண்பன் குழு விரும்புகின்றது. 39 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் சரியாக நடைபெறவும், காலவரையறைக்குள் கட்டி முடிப்பதற்கும் எழும் பிரச்சினைகளுக்கு உடைமை நிவாரணம் தேடவும் வெ.4.46 மில்லியன் தொகையைப் பெற்றிருக்கும் இ.சி.எல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திடம் (ECL Management Sdn. Bhd.) முழுமையாக கட்டுமானப் பணிகளுக்கு திட்ட மேலாண்மை ஆலோசக சேவைகளின் (PMC) வழி தீர்வினைக் காண வேண்டிய பட்சத்தில் குத்தகையாளர்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வி.கே.இரகுவின் மீது கூறப்பட்டுள்ளதா என்பதை நண்பன் குழு அறிய விரும்புகின்றது. 39 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்திற்கான திட்ட மேலாண்மை ஆலோசக சேவையினை வழங்கி வரும் இ.சி.எல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வி.கே.இரகு பின்வரும் கேள்விகளுக்கு விடை வேண்டுமென நண்பன் குழு கேட்டுக் கொள்கின்றது. கேள்வி 1 : தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக பள்ளி நிலம், அமைப்பு, பிற வசதிகள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டதா? (3.1.1) கேள்வி 2 : கட்டப்படவிருக்கும் பள்ளிகளின் நில உரிமை தொடர்பான விவகாரங்களைக் கட்டுமானத்திற்கு முன்னரே தீர்க்கப்படாதது ஏன்? (3.1.2) கேள்வி 3 : பள்ளி மேலாளர் வாரியத்தோடு ஒத்துழைத்து நில விவகாரம் தொடர்பிலான பிரச்சினைகள் ஏன் தீர்க்கப்படவில்லை? (3.1.3) கேள்வி 4 : பகாங் லஞ்சாங் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகும் நிலையில் பயன்படுத்துவதற்குத் தடையாக இருந்து வருவதாக கூறப்படும் புகார் உண்மையா? கேள்வி 5 : 39 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசக சேவையை வழங்க வேண்டிய நிலையில் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியத்தில் இடம்பெற்றது நியாயமா? கேள்வி 6 : லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பயன்படுத்துவதில் தடையாக இருந்துவரும் சாலை நிர்மாணிப்பிற்கு துணைக்கல்வியமைச்சர் தீர்வினைக் காண வழங்கிய ஆலோசனையை ஆலோசக நிறுவனம் நிராகரித்துள்ளதாகக் கூறப்படுவது உண்மையா? கேள்வி 7 : திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனம் குத்தகையாளர்களுக்கும் கல்வியமைச்சிற்கும் பாலமாக இருந்து கட்டுமானப் பணிகளை எளிமைப்படுத்த வேண்டிய பொறுப்பினில் துஷ்பிரயோகம் நடந்துள்ளதா? கேள்வி 8 : 39 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானம் தற்போதைய வில்லங்கமான சூழலில் எப்போது கட்டி முடிக்கப்படும்? கேள்வி 9 : பகாங் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான சாலை நிர்மாணிக்காமலேயே குடியேற்ற அனுமதியைப் பெறுவதற்கு (CCC) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? மேற்கண்ட கேள்விகளை நண்பன் குழு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டில் அபரிமிதமான உணர்வுகளைக் கொண்டிருக்கும் மலேசிய இந்தியர்களிடமிருந்து பெற்றுள்ள நிலையில் இந்திய அரசியல் பிரதிநிதித்துவத்தினரைப் போன்றே மௌனமான பதில்களை வி.கே.இரகு தருவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தீர்வு காணப்படும் வரை தொடரும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img