புதன் 21, நவம்பர் 2018  
img
img

மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த சில மணி நேரத்தில் என் கணவரின் உயிர் பிரிந்தது!
சனி 01 ஏப்ரல் 2017 12:41:12

img

தடுப்புக்காவலில் தன் கணவர் தனசீலன் முனியாண்டி மரணம் அடைவதற்கு முன்னதாக அவருக்கு சிகிச்சை அளித்த கோலகுபுபாரு மருத்துவமனை மற்றும் மருத்துவம் பார்த்த மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தனசீலனின் மனைவி பிரமிளா சின்னசாமி (வயது 42) நேற்று சுகாதாரத்துறை அமைச்சை கேட்டுக் கொண்டார். தன் கணவர் தனசீலன் கோலகுபுபாரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த மருத் துவமனையும் அவரை கவனித்த மருத்துவரும் உரிய முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கவில்லை என்று பிரமிளா குற்றஞ்சாட்டினார். தன் கணவரை நோயாளிகளை சாதாரணமாக கவனிப்பது போல் கவனித்து விட்டனர். அவர் மறுபடியும் போலீஸ் காவல் அறைக்கு கொண்டு வந்து விடு வதற்கு முன்பு அந்த மருத்துவமனையும் மருத்துவரும் முறையான சிகிச்சையை அளிக்கவில்லை. மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த சில மணி நேரத்தில் அவரின் உயிர் பிரிந்துள்ளது. தன் கணவர் முடியாமல், மிக கடுமையான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது, ஏன் அவ ருக்கு உரிய சிகிச்சையை அளிக்கவில்லை என்று பிரமிளா கேள்வி எழுப்பினார். அந்த மருத்துவமனை உரிய சிரத்தை எடுத்து என் கணவருக்கு சிகிச்சை அளித்திருந்தால் நிச்சயம் அவர் உயிர் பிழைத்து இருப்பார் என்று பிரமிளா தெரி வித்தார்.பிரமிளா நேற்று சுகாதார அமைச்சின் பொது உறவு அதிகாரி தேவராஜ் சுப்பிரமணியத்திடம் மகஜர் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசு கையில் இதனை தெரிவித்தார். தனசீலன் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி உலுசிலாங்கூர், புக்கிட் செந்தோசா போலீஸ் நிலையத்தின் தடுப்புக் காவல் அறை யில் மரணம் அடைந்தார். பின்னர் அவர் சுங்கைபூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் மரணம் அடைந்து விட்டதாக அறிவிக் கப்பட்டது. கேஸ்ட்ரிக் அல்சர் காரணமாக ரத்தத்தில் நச்சு கலந்ததால் தனசீலன் மரணம் அடைந்துள்ளார் என்று சவப்பரிசோதனை நிபுணர் டாக்டர் ருசாயின் ரஹிமி ஓர் அறிக்கையில் தெரிவித்து இருந்தார். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தனசீலன் புக்கிட் பெருந்தோங்கில் கைது செய்யப்பட்டார். அவர் பிப்ரவரி 22 முதல் 25 ஆம் தேதி வரையில் போலீஸ் காவல் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எனினும் குடல் புண் நோயினால் அவதியுற்ற நிலையில் போலீஸ் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட தனசீலனை தாங்கள் வெளிநோயாளியாக சிகிச்சை அளித்ததுடன் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வில்லை என்பதை கோல குபு பாரு மருத்துவமனை ஒப்புக் கொண்டது. தன் கணவரை இழந்த நிலையில் இருக்கும் தாம் ஒரு ஆஸ்துமா நோயாளி என்றும் தனக்கு நீதி வேண்டும் என்றும் ரவாங்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்கு தாயான பிரமிளா தனது மகஜரில் குறிப்பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மே.9 தேர்தல் வெற்றியை அறிவிப்பதில் தாமதம் ஏன்? அம்பலப்படுத்தினார் துன் மகாதீர்.

அம்னோ, பாஸுடன் இணையும்படி கூட்டணியைச்

மேலும்
img
நாட்டைச் சீர்குலைத்த நயவஞ்சகர்கள். ஊழல் அரசியல்வாதிகளை சுல்தான் நஸ்ரின் ஷா சாடினார்.

இத்தகைய சீர்கெட்ட தலைவர்களால் ஏற்படக்கூடிய

மேலும்
img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img