வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

மலாய்க்காரர், சீனர்களுக்கு நிலம்!
சனி 01 ஏப்ரல் 2017 12:29:44

img

ஒரு காலத்தில் இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த நீண்ட நெடிய வரலாற்றைக்கொண்ட ரவாங் அருகில் உள்ள குண்டாங்கில் இந்தியர்கள் தங்களின் இருப் பிடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அடையாளமாக உரிமையுடன் கிடைக்க வேண்டிய நிலப்பட்டாவிற்காக பல ஆண்டு காலமாக போராடி வரும் அவலநிலை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கம்போங் பாரு குண்டாங்கில் 47 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திய மக்களுக்கான நிலப்பட்டா எங்கே என்று வட்டார இந்தியர் நடவடிக்கை குழுத் தலைவர் கணேசன் நேற்று கேள்வி எழுப்பினார்.ரவாங்கில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கம்போங் பாரு குண்டாங் கிராமம் பல நூற்றாண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும். ஆரம்பக்காலத்தில் இங்கு இந்தியர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் என அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.இங்கு வாழ்ந்த மலாய்க்காரர்கள், சீனர்களுக்கு நிலம் ஒதுக்கி தரப்பட்டது.ஆனால் 47 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் 100 இந்திய குடும்பங்களுக்கு மட்டும் இதுநாள் வரை நிலம் ஒதுக்கித் தரப்படவில்லை.இந்த நிலத்தை பெறுவதற்காக நாங்களும் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்கள் போராட்டங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிகிறது. இவ்வட்டாரத்தை சுற்றி 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வீடுகளை கட்டி வருகின்றனர். இவ்வீடுகளை வாங்குவது என்பது எங்களுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு விஷயமாகும்.இதன் அடிப்படையில் தான் எங்களுக்கென நிலங்களை ஒதுக்கி தந்தால் அதில் வீடுகளை கட்டிக் கொள்ள நாங் கள் தயாராக இருக்கிறோம். நிலத்தை பெருவதிலேயே எங்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வீட்டை கட்டுவது என்பது கனவாகி விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டு விட்டது. ஆகவே கம்போங் பாரு குண்டாங்கில் வாழ்ந்து வரும் இந்திய மக்கள் எதிர்நோக்கி வரும் இந்த நிலப்பட்டா பிரச்சினைக்கு மாநில அரசு உடனடியாக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கணேசன் கேட்டுக் கொண்டார். கம்போங் பாரு குண்டாங்கில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறேன். எப்படியாவது நிலப்பட்டா எங்களுக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்று எனக்கு 70 வயதாகி விட்டது. இனியும் நிலப்பட்டாவிற்காக போராட என் மனதிலும், உடல் ரீதியிலும் தெம்பில்லை. ஆகவே சிலாங்கூர் மாநில அரசு உடனடியாக எங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று நாரயணசாமி மாரிமுத்து கூறினார். கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு பிள்ளை களை படிக்க வைத்து வருகிறேன். என்னால் 5 லட்சம் வெள்ளி வரையிலான வீட்டை வாங்க முடியாது. நிலப்பட்டா கிடைத்தால் அங்கு ஒரு வீட்டை கட்டிக் கொள்வேன். ஆனால் அந்நிலப்பட்டா இதுநாள் வரை எங்களுக்கு கிடைக்கவில்லை. நிலப்பட்டா கோரி கோம்பாக் நில அலுவலகத்தில் பல முறை கடிதம் வழங்கியுள்ளேன். அக்கடிதங்களுக்கு இதுநாள் வரை பதில் கிடைக்க வில்லை என்று தன லெட்சுமி ராஜகோபால் கூறினார். குண்டாங்கில் காலியாக கிடக்கும் இடத்தில் இக்குடும்பங்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்று கோம்பாக் நில அலுவலகத்தில் நடவடிக்கை குழு மனு வழங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் அம்மனுவிற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆகவே கோம்பாக் நில அலுவல கமும், சிலாங்கூர் மாநில அரசும் எங்கள் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கணேசன் கேட்டுக் கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img