புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

நம் நாட்டிலுள்ள இந்தியர்களை மஇகா அனாதையாக்கி விட்டது
சனி 01 ஏப்ரல் 2017 12:24:57

img

இந்நாட்டிலுள்ள இந்தியர்களை மஇகா அனாதையாக்கி விட்டது என்று ஜன நாயக செயல் கட்சி யைச் சேர்ந்த பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு சாடினார். 2017ஆம் ஆண்டில் மலேசிய இந்தியர்களுக்காக செயல் வடிவத் திட்டம் வரையறுக்கப்படும் என்று மஇகாவும், தேசிய முன் னணி அரசாங்கமும் கூறிய வேளையில், ஆண்டின் நான்காவது மாதத்தில் காலடி எடுத்து வைக்கும் வேளையிலும்கூட, அந்த செயல் வடிவத் திட்டம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பது இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது என்றார். மலேசிய இந்தியர்களுக்காக செயல் வடிவத் திட்டம் வரையறுக்கப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறி வித்தார். அது இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கி வைக்கப்படும். அதன் பின்னர் அதனை முறையாக அமல்படுத்துவதற்கு அமலாக்கச் செயலகமும் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதம் பிறக்கும் வரை எந்தவித அறிவிப்பையும் நேற்று முன்தினம் வரையில் அரசாங்கம் செய்யவில்லை என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கஸ்தூரி பட்டு கூறினார். பிரதமர் துறையின் பொருளாதார திட்டமிடல் பிரிவுக்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை துணை அமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தை அனாதையாக்கும் வகையில் அதற்கு சரியான முறையில் பதிலளிக்காமல் போனதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அண்மையில் தாம் மக்களவையில் அதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, வரும் 23.4.2017ஆம் தேதி அதாவது மூன்று மாதங்கள் கழித்து பிரதமர் அதனை அறிவிப்பார் என சிறிதும் பொறுப்பில்லாமல் கூறினார். மஇகா தேசிய துணைத் தலைவராகவும் இருக்கும் அவரின் அந்த பதில் சிறிதும் பொறுப்பற்ற முறையில் இருந்தது என்று அவர் குற்றம் சாட்டினார்.இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் நீண்டகாலமாக இன்னும் பின்தங்கியுள்ள நிலையி லேயே உள்ளனர் என்பதை தேவமணி நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்நாட்டிலுள்ள இந்திய சமூகம் பின்தங்கியுள்ளதற்கு மஇகாவும், தேசிய முன்னணியுமே பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் பொருளா தாரம் உட்பட அனைத்து துறைகளிலும் இந்திய சமூகம் பின்தள்ளப்பட்டுள்ளதை அவர்கள் நன்கு உணர வேண்டும் என்றார். இந்தியர்கள் இனியும் தோட்டங்களிலும், சாலை செப்பணிப்படுவதிலும் வேலை செய்யக் கூடாது. மாறாக, அவர்கள் அரசாங்கத் துறைகளில் குமாஸ்தாவாகவும், பிரபல வழக்கறிஞர்களாகவும் உருவாக வேண்டும். அவர்கள் இனியும் அனாதைகளாக நிற்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்ற கஸ்தூரி பட்டு வாக்காளர்களாக இருந்ததை ஒருவேளை மஇகாவும், தேவமணியும் மறந்திருக்கலாம் என்றார். -தி மலேசியன் டைம்ஸ்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.

தமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்

மேலும்
img
அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.

ஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை

மேலும்
img
இலங்கையில் தொடரும் வெடிகுண்டு பீதி.

மேலும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் சாத்தியம்

மேலும்
img
முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்

ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம்

மேலும்
img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img